வைபவுடன் கைகோர்க்கும் பார்வதி.. விரைவில் வெளியாகும் "ஆலம்பனா".. பிரஸ் மீட்டில் படக்குழு - வைரல் போட்டோஸ்!

First Published Dec 10, 2023, 11:30 AM IST

Aalambana Movie Team : கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான பபூன் திரைப்படத்திற்கு பிறகு பிரபல நடிகர் வைபவ் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் திரைப்படம் தான் "ஆலம்பனா". இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது.

Aalambana

பிரபல நடிகர் வைபவ் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான "சரோஜா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகர். தற்பொழுது பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

முரளி குடும்பத்தில் இருந்து களமிறங்கும் மற்றொரு நடிகர்? பையா 2 லோடிங் - லிங்குசாமி எடுத்த தீடீர் முடிவு!

Vaibav

இந்நிலையில் அறிமுக இயக்குனர் பாரி கே விஜய் என்பவருடைய இயக்கத்தில், பிரபல KJR ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ள "ஆலம்பனா" என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் மாயாஜாலங்கள் நிறைந்த ஒரு கமெர்சியல் காமெடி படமாக உருவாகியுள்ளது.

Aalambana Movie team

இந்த திரைப்படத்தில் வைபவ் அவர்களுக்கு ஜோடியாக பிரபல நடிகை பார்வதி நாயர் நடிக்க, நடிகர் முனீஸ் காந்த் ஜினி பூதமாக நடித்துள்ளார். மேலும் படத்தில் வைபவ் அவர்களின் தாத்தாவாக பிரபல நகைச்சுவை மேடை பேச்சாளர் மற்றும் நடிகர் லியோனி முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. 

Parvati Nair

மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் ரோபோ சங்கர், காலி வெங்கட், முரளி சர்மா மற்றும் வில்லன் நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். வருகின்ற டிசம்பர் மாதம் 15ஆம் தேதியின் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!