Rajini Salary: தலைவர் 169 ல் ரஜினியின் சம்பளம் இத்தனை கோடியா..? இந்திய சினிமா பிரபலங்களில் டாப் லிஸ்டில் ரஜினி

First Published May 21, 2022, 12:18 PM IST

Rajini Salary: தலைவர் 169 படத்தில் ரஜினி அதிரடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி ரூ 150 கோடி கேட்டுள்ளார். இதனால், இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகராக ரஜினி தான் முதல் இடத்தில் உள்ளாராம். 

rajinikanth

தலைவர் 169 படத்தில் தன்னுடைய சம்பளத்தை ரஜினி உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அவர் அதிரடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி ரூ 150 கோடி கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர் நிறுவனமும் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் நடிகர் அக்ஷய் குமார்  அதிகபட்சமாக ரூ. 135 கோடி வாங்கி வருகிறார். தற்போது, ரஜினி அவரை விட அதிக சம்பளம் வாங்கி இந்திய சினிமா பிரபலங்களில் டாப் லிஸ்டில்  உள்ளார். 

rajinikanth

இந்திய சினிமாவின் தரமான படங்கள் ஹாலிவுட் வரை ரீச் பெற்று வருகிறது. சமீப காலமாக தென் இந்திய சினிமாவில் வெளிவரும் படங்கள் அனைத்து பான் இந்தியா அந்தஸ்தை பெற்று ஹிட் கொடுத்து வருகிறது. நல்ல தரமான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

rajinikanth

அண்மையில் கன்னடத்தில் வெளியான KGF 2 திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது, ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த ஒரு படத்தால் யஷ் சம்பளம் அதிகமானதாக கூறப்படுகிறது.அதே போன்று, RRR படமும் வசூலில் 1000 கோடி கிளப்பில் இணைந்தது. 

rajinikanth

தற்போது இந்திய சினிமாவில் பல நடிகர்களின் சம்பளம் ரூ. 100 கோடி எட்டிவிட்டது. தமிழ் சினிமாவில் தன்னுடைய படத்திற்கு நடிகர் விஜய் மற்றும் அஜித் 100 கோடி சம்பளம் பெற்று வருகின்றனர். அதேபோன்று, ரஜினி அண்ணாத்த படத்திற்காக ரூ. 100 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இதையடுத்து, அடுத்த படத்திற்கு சம்பளத்தை அதிகம் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

rajinikanth

ஆம், தலைவர் 169 படத்தில் தன்னுடைய சம்பளத்தை ரஜினி உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு அவர் அதிரடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி ரூ 150 கோடி கேட்டுள்ளார். இதனால்,  இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகராக ரஜினி தான் முதல் இடத்தில் உள்ளாராம். 

rajinikanth

ரஜினியை அடுத்து, அதிகம் சம்பளம் பெறும் இந்திய சினிமா நடிகர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அக்ஷய் குமார் புதிய படம்- ரூ. 135 கோடி, விஜய் -அஜித் -ரூ 100 கோடி, பிரபாஸ்- ரூ. 130, சல்மான் கான்- ரூ. 125 கோடி, ஷாருக்கான்- ரூ. 100, மகேஷ் பாபு- ரூ. 70 கோடி சம்பளம் பெற்று வருகிறார்களாம். 

மேலும் படிக்க...Sivakarthikeyan: கமர்ஷியல் மட்டும் போதுமா..? தோல்விகளுக்கு காரணம் கண்டறிந்த... ஹிட் நாயகன் சிவகார்த்திகேயன்..

click me!