எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்... மிஸ்டர் X படத்துக்காக ஒரே ஆண்டில் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறிய ஆர்யா

First Published Mar 18, 2024, 11:44 AM IST

மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக நடிகர் ஆர்யா ஒரே ஆண்டில் சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறியதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

Arya

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஆர்யா. அவர் நடிப்பில் கடைசியாக சைந்தவ் என்கிற தெலுங்கு படம் ரிலீஸ் ஆனது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன இப்படம் பெரியளவில் வெற்றியை ருசிக்கவில்லை. இதனால் அடுத்தபடம் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு நடித்து வருகிறார் ஆர்யா.

mr x movie team

அவர் நடிப்பில் தற்போது மிஸ்டர் எக்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. அப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அப்படத்தில் ஆர்யாவுடன் சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, கவுதம் கார்த்திக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தை கவுதம் மேனனிடன் உதவி இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் படத்தை இயக்கி இருந்தார்.

இதையும் படியுங்கள்... மலையாள படத்தில் நடிக்க படையெடுக்கும் கோலிவுட் ஸ்டார்ஸ்... அனுஷ்கா & கோட் பட நடிகருக்கு கிடைத்த அடிபொலி சான்ஸ்

Arya Transformation

மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளதாம். இந்த நிலையில், மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக நடிகர் ஆர்யா எந்த அளவுக்கு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதை விளக்கும் விதமாக அவரே எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

Arya Transformation For Mr X movie

அந்த பதிவில், தான் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இப்படத்திற்காக தயாராக ஆரம்பித்தேன். செப்டம்பரின் ஷூட்டிங்கை தொடங்கினோம். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளோம். என்னுடைய இலக்கை அடைய ஒரு வருடம் ஆகி இருக்கிறது. தற்போது மார்ச் மாதம் என்னுடைய தோற்றம் இது என குறிப்பிட்டு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உடல் எடை கூடிய நிலையில் இருக்கும் புகைப்படத்தையும், தற்போது சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறியுள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் ஆர்யா. 

இதையும் படியுங்கள்... Kanguva : திடீரென வந்த டீசர் அப்டேட்... கங்குவா படக்குழுவின் சைலண்ட் சம்பவத்தால் திக்குமுக்காடி போன ரசிகர்கள்

click me!