Savukku : "சவுக்கு சங்கரை தூக்கிலிட வேண்டும்" பதாகையோடு நீதிமன்றத்திற்கு முன் திடீரென குவிந்த பெண்கள் அமைப்பு

By Ajmal Khan  |  First Published May 8, 2024, 3:15 PM IST

கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், கோவை சிறையில் இருந்து மதுரை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது 100க்கும் மேற்பட்ட பெண்கள் கூடி சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


சவுக்கு சங்கர் கைது

பிரபல  யு டியூப்பர் சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகளை ஒருமையிலும் விமர்சித்தும் கடுமையாக பேசி வந்தார். மேலும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து கூறி வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சவுக்கு சங்கர்,  காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை அவதூறு செய்யும் வகையில் கருத்து ஒன்றை தெரிவித்து இருந்தார். இந்த கருத்திற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சவுக்கு சங்கர் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தேனியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.

Tap to resize

Latest Videos

Savukku: சவுக்கு சங்கரை விடாமல் துரத்தும் புகார்.!!ஒரே நாளில் பதிவான அடுத்தடுத்த வழக்கால் உறுதியாகும் குண்டாஸ்

நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்

அப்போது அவரது வாகனத்தில் 400 கிராம் அளவிற்கு கஞ்சா போதை பொருள் இருந்ததாக மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது.  இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். முன்னதாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் சவுக்கு சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோவை சிறையில் இருந்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக  போலீசார் அழைத்து சென்றனர்.

பெண்கள் போராட்டம்

சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகும் தகவலை கேள்விப்பட்ட பெண்கள் அமைப்பின திடீரென நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு கூடினர்.மதுரை மாவட்ட பெண்கள் பாதுகாப்பு மையம் என்கின்ற மஞ்சள் நிற பதாகைகளை  கைகளில் ஏந்தியவாறு நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் நீதிமன்ற வாசலில் கூடினர். இதனையடுத்து போலீசார் தடுப்புகள் அமைத்து மகளிர் அமைப்பினரை உள்ளே செல்ல விடாத வகையில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, தூக்கிலிடு,தூக்கிலிடு பாலியல் குற்றவாளி சவுக்கு சர்க்கரை தூக்கிலிடு என வாசகமும்,   பெண் காவலர்களை இழிவு படுத்திய கஞ்சா சவுக்கு சங்கரை குண்டாஸில் கைது செய்,  நீதி அரசர்களை அவமானப்படுத்திய சவுக்கு சங்கரை குண்டாஸில் கைது செய் என்ற வாசகத்தோடு பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

GK VASAN : தமாகா நிர்வாகிகளை தட்டித் தூக்கிய எடப்பாடி... அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவரால் ஜி.கே வாசன் ஷாக்

click me!