AK 61 படத்தின் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித்தின் புதிய லுக்.? இணையத்தை தெறிக்க விடும் ரசிகர்கள்...

First Published May 18, 2022, 6:40 PM IST

Actor ajith kumar new look for ak 61: ஏகே 61 படத்தில்  நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும், அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

Ajith61

வலிமை திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் கூட்டணியில் உருவாகி வரும் AK 61 படத்தில் நடித்து வருகிறார். கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது.

Ajith61

வங்கிக்கொள்ளை மையமாக வைத்து உருவாகிவருவதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் கல்லூரிப் பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நிரவ் ஷா இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படும் மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

ajith


படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து, இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகளையும் வேகமாக நடத்தி முடித்து விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Ajith61

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் இதில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதற்காக அஜித் புதிய ஷேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். தற்போது அஜித் அந்த கெட்டப்புடன் விமான நிலையம் வந்துள்ள அஜித் அங்குள்ள  ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க....Viruman: விநாயகர் சதுர்த்தி வெளியீடாக கார்த்தியின் விருமன் படம் ...சூப்பர் அப்டேட் கேட்டு குஷியான ரசிகர்கள்..

click me!