Gouri G Kishan : 96 பட நடிகரை ரகசிய திருமணம் செய்துகொண்டாரா குட்டி திரிஷா? வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

First Published Mar 29, 2024, 10:14 AM IST

96 படத்தில் குட்டி திரிஷாவாக நடித்திருந்த நடிகை கவுரி கிஷானும், எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யாவும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகிறது.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 96. இப்படத்தில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்தார். அதேபோல் திரிஷாவின் இளம் வயது கதாபாத்திரத்தில் கெளரி கிஷான் நடித்திருந்தார். இருவருக்குமே இது முதல் படமாக இருந்தாலும் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ராம், ஜானுவாக திரையில் மிளிர்ந்தனர்.

96 படத்தின் வெற்றிக்கு பின்னர் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கெளரி கிஷான் இருவருக்குமே சினிமாவில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன்படி ஆதித்யா பாஸ்கர், கவுதம் மேனன் இயக்கத்தில் பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். அதேபோல் கெளரி கிஷான், அடியே படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருந்தார்.

இதையும் படியுங்கள்... Aadujeevitham : கேரளாவில் விஜய் பட வசூலை கிட்ட கூட நெருங்க முடியாத ஆடுஜீவிதம்! முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

அடியே படத்தின் வெற்றிக்கு பின்னர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ஹாட் ஸ்பாட். இப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஜனனி, ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, கெளரி கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் சர்ச்சையில் சிக்கியதால் படம் வெளியான பின்னர் மேலும் சர்ச்சைகள் வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஹாட் ஸ்பாட் படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷான் இப்படத்தை புரமோட் செய்யும் விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். அதில் ஆதித்யா பாஸ்கர் கழுத்தில் தாலியோடு கெளரி கிஷான் உடன் மணக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவர்கள் நிஜமாகவே திருமணம் செய்துகொண்டதாக நினைத்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... Anitha Vijayakumar: ஜாம் ஜாம்னு நடந்து முடிந்த மகளின் திருமணம்; தோழிகளோடு Goaவில் சில் பண்ணிய அனிதா விஜயகுமார்

click me!