MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Aadujeevitham : கேரளாவில் விஜய் பட வசூலை கிட்ட கூட நெருங்க முடியாத ஆடுஜீவிதம்! முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

Aadujeevitham : கேரளாவில் விஜய் பட வசூலை கிட்ட கூட நெருங்க முடியாத ஆடுஜீவிதம்! முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

பிளெஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால் நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 29 2024, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ். அவர் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் தான் ஆடுஜீவிதம். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த நஜீப் என்பவர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றபோது அங்கு பாலைவனத்தில் ஒரு கும்பலிடம் சிக்கி சுமார் 3 ஆண்டுகள் சித்திரவதையை அனுபவித்து அதில் இருந்து மீண்டு வந்த கதையை தான் படமாக்கி இருக்கின்றனர்.

25

ஆடுஜீவிதம் படத்தின் ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. சுமார் 10 ஆண்டுகள் நடைபெற்ற அப்பணி கடந்த 2018-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 6 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு, அப்படத்தை வெற்றிகரமாக நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து உள்ளனர்.

35

ஆடுஜீவிதம் படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்காக 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்துள்ள நடிகர் பிருத்விராஜின் உழைப்பை பார்த்து பிரம்மித்துபோன ரசிகர்கள், படமும் உலகத்தரத்தில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர். இப்படி பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் ஆடுஜீவிதம் படம் பாக்ஸ் ஆபிஸிலும் பிக் அப் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Anitha Vijayakumar: ஜாம் ஜாம்னு நடந்து முடிந்த மகளின் திருமணம்; தோழிகளோடு Goaவில் சில் பண்ணிய அனிதா விஜயகுமார்

45

இந்த நிலையில், ஆடு ஜீவிதம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.7.45 கோடி வசூலித்து உள்ளது. இதில் கேரளாவில் அதிகபட்சமாக ரூ.6.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.40 லட்சமும், தமிழ்நாட்டில் ரூ.50 லட்சமும், தெலங்கானாவில் ரூ.40 லட்சமும், இந்தியில் 10 லட்சமும் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் இப்படம் முதல் நாளில் ரூ.16 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என சொல்லப்படுகிறது.

55

கேரளாவில் ஆடுஜீவிதம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தும் அப்படத்தால் விஜய்யின் லியோ பட சாதனையை முறியடிக்க முடியவில்லை. கேரளாவில் முதல் நாளில் அதிக கலெக்‌ஷன் அள்ளிய படங்களின் பட்டியலில் லியோ ரூ.12 கோடி வசூலித்து முதல் இடத்தில் உள்ளது. அதில் பாதி தான் ஆடுஜீவிதம் படத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Aishwarya Shankar: முதல் பத்திரிகை முதல்வருக்கு... மகளின் இரண்டாவது திருமண வேலைகளை தடபுடலாக தொடங்கிய ஷங்கர்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved