தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் மிகவும் வித்தியாசமான நடிகராகவும், அன்பான மனிதராகவும் இருப்பவர் விஜய் சேதுபதி. குறிப்பாக நான் அப்படிதான் நடிப்பேன்... இப்படித்தான் நடிப்பேன்... என பந்தா காட்டும் நடிகர்கள் மத்தியில் இவர் தனித்து நிற்கிறார் என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோவாக நடித்து வெளியான 'காத்து காக்கள ரெண்டு காதல்' படமும் சரி, வில்லனாக நடித்து வெளியான 'விக்ரம்' படமும் சரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நீண்ட நாட்களாக எப்போது வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டு வெளியான 'மாமனிதன்' திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது.
எனவே எப்போதும் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இவரது இந்த கதையை கேட்கும் பலர், இவர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான '96 ' படத்தின் கதை போலவே இருப்பதாக கூறி வருகிறார்கள்.
விஜய் சேதுபதி தன்னுடைய பள்ளி பருவ காதல் குறித்து பகிர்ந்துள்ளதாவது... நான் 'ஜானு' என்கிற பெண் பின்னாடி சுமார் 4 வருடங்கள் சுற்றினேன். ஆனால் அந்தப் பொண்ணுக்கு கடைசி வரை அது தெரியாது. இப்போது கூட அது தெரியாமல் இருக்கலாம். அதன் பின் பல நாட்கள் அவரை நான் பார்க்கவே இல்லை. என் திருமணத்திற்கு முன்பு, ஒரு நாள் என் தந்தையுடன் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது அந்தப் பெண் மாதிரி ஒரு பெண் நடந்து போனாங்க, நான் வண்டியை திருப்பினேன் என் தந்தை ஏண்டா வண்டியை திருபுறனு கேட்டாரு... அப்போ நான் நான்கு வருடமா சைட் அடிச்ச பொண்ணு போகுதுன்னு நினைக்கிறேன், பாத்துட்டு போயிடலாம்னு சொன்னேன் அதன் பின் திரும்பி அவங்கள பார்க்க முடியவில்லை.
மேலும் செய்திகள்: 51 வயதிலும்... 20 வயது ஹீரோயின் போல் தங்க நிற உடையில் தகதகவென மின்னி யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு!
இப்போது நான் திரும்ப பார்த்துவிட வேண்டாம் என நினைக்கிறேன். எப்போ அதைப்பற்றி நினைத்தாலும் அந்த பொண்ணு, அப்படியே ஸ்கூல் யூனிபார்ம்மில் வர இமேஜ் தான் என் கண்ணுக்குள் வரும். அது ஒரு அழகான விஷயம். அந்தப் பழைய விஷயம் ரொம்ப அழகு, அது அப்படியே இருக்கட்டும் என்று நினைக்கிறேன். அதை அழிக்க வேண்டாம்னு நினைக்கிறேன் என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.