சமீப காலமாக, தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருக்கும் அஜித், விஜய், ரஜினிகாந்த் போன்றோர்... சென்னையில் படப்பிடிப்பை நடத்த பல ஃபிலிம் சிட்டி இருந்தாலும், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராம் ஃபிலிம் சிட்டியை தேடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அங்கு தங்களுடைய படங்களுக்கு ஏற்றாப்போல், மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறது.
அதாவது கொரோனா பரவலுக்கு பிறகு, தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து பேசி முடிவெடுக்க முடிவு செய்துள்ளதால், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு இது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என தெலுங்கு திரையுலகின் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
எனவே ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தெலுங்கு மாநிலங்களில் வேலை நிறுத்தம் உறுதி செய்யப்பட்டு, அதற்கான அறிக்கையும் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, தற்போது ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வரும் படப்பிடிப்புகளான ரஜினியின் 'ஜெயிலர்', விஜய்யின் 'வாரிசு', அஜித்தின் 'ஏகே 61' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் குறித்த நேரத்தில் எடுக்கமுடியாமல் புதிய பிரச்சனையாக வந்துள்ளது. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் துவங்குவதற்கு முன்பே இப்படி ஒரு பிரச்சனை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: 51 வயதிலும்... 20 வயது ஹீரோயின் போல் தங்க நிற உடையில் தகதகவென மின்னி யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு!