நடிகர் தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தனுஷ் தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் இணையத்தில் அதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இதில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.நாளை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இதன் டீசர் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் போஸ்டரும் தற்போது வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து வரும் அப்டேட்களால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் தனுஷ், செல்வராகவன், தந்தை கஸ்தூரி ராஜா, தாய், சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் என கூட்டு குடும்பமாக எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.