AK 61 : அஜித்தை அடிக்க பாலிவுட்டில் இருந்து டெரரான வில்லனை களமிறக்கிய H.வினோத்- இது வேறலெவல் கூட்டணியா இருக்கே

Published : Jul 27, 2022, 08:02 PM IST

AK 61 villain : ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
14
AK 61 : அஜித்தை அடிக்க பாலிவுட்டில் இருந்து டெரரான வில்லனை களமிறக்கிய H.வினோத்- இது வேறலெவல் கூட்டணியா இருக்கே

அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய ஹெச்.வினோத், அவருடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த படம் தான் ஏகே 61. மேற்கண்ட இரண்டு படங்களை தயாரித்த போனி கபூர் தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

24

ஏகே 61 படத்தின் கதை வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து அமைக்கப்பட்டு உள்ளதாம். இதற்காக சென்னை மவுண்ட் ரோடில் உள்ள பிரபல வங்கியை அப்படியே தத்ரூபமாக செட் ஆக உருவாக்கி அதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதையும் படியுங்கள்... திருச்சியில் திடீரென திரண்ட ரசிகர்களுக்காக மாஸ்டர் விஜய் பாணியில் அஜித் செய்த மாஸ் சம்பவம் - வைரலாகும் வீடியோ

34

ஏகே 61 படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் அஜித் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். காதில் கடுக்கன், நீளமான தாடி என செம்ம மாஸான கெட் அப்பில் அவர் வலம் வரும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகின.

44

இந்நிலையில், ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகரும், கே.ஜி.எஃப் 2-வில் வில்லனாக மிரட்டியவருமான சஞ்சய் தத் தான் ஏகே 31 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படியுங்கள்... கடனை திருப்பி கேட்டது குத்தமா... ‘சதக் சதக்’ என சரமாரியாக வெட்டிய வில்லன் நடிகரை புடிச்சு ஜெயில்ல போட்ட போலீஸ்

click me!

Recommended Stories