லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் தி லெஜண்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். லெஜண்ட் படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அசுரன் பட ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லெஜண்ட் திரைப்படம் நாளை, ஜூலை 28-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பேன் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வாங்கி உள்ளார். இப்படத்தை உலகளவில் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... திருச்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித்!
அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள லெஜண்ட் சரவணன் இப்படத்திற்காக அதிகாலை 4 மணி காட்சியையும் திரையிட ஏற்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி இது பேன் இந்தியா படமாக வெளியாக உள்ளதால், ஆந்திரா, கேரளா, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பிரஸ் மீட்டிலும் பங்கேற்று வருகிறார் சரவணன்.