செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இப்படத்தின் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என்கிற பெயரில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் வில்லனாக சுனில் நடித்திருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார்.
அவரது இசையில் வெளிவந்த ஸ்ரீவள்ளி முதல் ஊ சொல்றியா மாமா பாடல் வரை அனைத்துமே பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது. அதோடு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக நடிகை சமந்தா, ஊ சொல்றியா மாமா பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனமாடினார். இப்பாடலும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இப்பாடலை பார்க்கவே தியேட்டருக்கு படையெடுத்து வந்த ரசிகர்கள் ஏராளம். அந்த அளவுக்கு இப்பாடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... ஹீரோவாக செல்வராகவன்... ஹீரோயினாக ‘வாரிசு’ நடிகை - பரபரப்பாக தயாராகும் அரசியல் படம்
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகம் போலவே இதிலும் ஒரு ஐட்டம் சாங் இடம்பெற உள்ளதாம். இதற்காக முதலில் படக்குழு சமந்தாவை தான் அணுகியது. ஆனால் அவர் நடனமாட மறுப்பு தெரிவித்துவிட்டதால், வேறு நடிகையை கமிட் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வந்தது.
இந்நிலையில், அந்த நடிகை யார் என்கிற தகவல் கசிந்துள்ளது. அதன்படி தற்போது தெலுங்கில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீலீலாவை தான் புஷ்பா 2 படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதற்காக அவருக்கு பெரும் தொகையை சம்பளமாக கொடுக்கவும் உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை ஸ்ரீலீலாவுக்கு தற்போது 22 வயது ஆகிறது. இவர் தெலுங்கில் அரை டஜன் படங்களுடன் செம்ம பிசியான நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... முதல் பாடலே செம மாஸா இருக்கே... அனிருத் இசையில் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்- வைரலாகும் ஜவான் பர்ஸ்ட் சிங்கிள்