
மாரடைப்பு என்பது, சமீப காலமாக இளம் வயதினரையும் தாக்கக்கூடிய பிரச்சினையாக மாறிவிட்டது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 1.8 கோடி பேர் உலக அளவில் மாரடைப்பால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் உயிர் பிழைத்தாலும், சாதாரண நெஞ்சுவலி என்று நினைத்து மாரடைப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பலர் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
மாரடைப்பின் அபாயத்தை தவிர்க்க இந்த ஏழு விஷயங்களை நீங்கள் தினமும் கடைபிடித்தால் போதும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்ப்போம்.
காலை உணவு அவசியம்:
நீண்ட உறக்கத்திற்கு பின்னர், உங்கள் காலை பொழுதை புத்துணர்ச்சியாக மட்டுமின்றி, காலை உணவோடு தொடங்குங்கள். காலை உணவு உட்கொள்ளுபவர்களுக்கு இதய நோயின் அபாயம் குறைகிறது. அதை போல் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான பழங்கள், பால், முட்டை, பாதாம் போன்ற ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் புரோட்டின் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
பீரியட்ஸ் தள்ளிப் போகுதா? இந்த உணவுகள் போதும்..இனி சரியா வந்திடும்!
எளிமையான உடற்பயிற்சி:
காலை எழுந்ததும், முடிந்தவரை ஒரு 30 நிமிடங்கள் குறைந்தபட்ச உடற்பயிற்சிக்காக செலவழிக்கவும். கால்களை நன்கு நீட்டி, மடக்கி, உடலை லேசாக முன்னும் - பின்னும் அசைத்து நீங்கள் செய்யும் எளிமையான பயிற்சிகள், உங்களின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இதனால் இதய பாதிப்புகள் தவிர்க்கப்படும்.
உப்பு சர்க்கரை அளவை குறைக்கவும்:
காலை எழுந்தவுடன் பலர் தங்களுடைய அழகான நாட்களை, இனிமையான காபி - டீ போன்ற புத்துணர்ச்சி பானங்களுடன் துவங்குவது வழக்கம். காலையிலேயே அதிகப்படியான சர்க்கரை எடுத்துக் கொள்வது, ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். அதே போல் மாரடைப்புக்கு முக்கிய காரணமாகவும் அமையும். சர்க்கரை உங்களின் உடல் எடையையும் அதிகரித்து, நீரிழிவு நோயாளிகளுக்கு பிரச்னையை ஏற்படுத்தும். அதேபோல் அதிகப்படியான உப்பு ஒருவருடைய ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். முடிந்தவரை சர்க்கரை மற்றும் உப்பை உங்களுடைய உணவில் இருந்து தவிர்ப்பது சிறந்தது.
ஸ்காட்ச் மற்றும் விஸ்கி இடையே என்ன வித்தியாசம்? எது சிறந்தது?
தண்ணீர் குடிப்பது அவசியம்:
உங்களுடைய உடலில் நீர் சத்து மிகவும் முக்கியமான ஒன்று. நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அவசியம் நீங்கள் குடிக்க வேண்டும். இது உங்களுடைய உடல் நலனுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் சிறந்தது. ஒரு சிலர் தண்ணீருக்கு பதிலாக சோடா மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிக்கிறார்கள். இது உடலுக்கு பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
தண்ணீர் குடிக்க முடியாதவர்கள், குறைந்த உப்புடன் மோர், எலுமிச்சை சாரி, அல்லது பழ சாறுகளை சர்க்காரை இல்லாமல் குடிப்பது சிறந்தது.
மன அழுத்தத்தை சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்:
ஒருவருடைய இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அவருடைய மனம் எந்தவித அழுத்தமும் இன்றி அமைதியாக இருக்க வேண்டும். நாள்பட்ட மன அழுத்தம் உயர் ரத்த அழுத்தத்தை கூட்டும். இது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்களுடைய மனநிலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, ஆழ்ந்த சுவாசம் தியானம் அல்லது நீங்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்துங்கள். தினமும் 10 நிமிட தியானம் உங்களுக்கு அதிசயத்தை ஏற்படுத்தும்.
காலையில் உடற்பயிற்சியா? அட! இந்த 'நேரத்துல' செய்றதால தான் நன்மை இருக்கு!!
சிரிப்பு அவசியம்:
வாய்விட்டு சிரித்தால்... நோய்விட்டுப் போகும் என்பது பழமொழி. இது பழமொழி மட்டுமல்ல நிஜத்திலும் உண்மையான வாக்கியம். சிரிப்பு உங்கள் இதயத்திற்கு அமைதியைத் தரும். மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கும். இதனால் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. தினமும் சிரிக்க நேரம் ஒதுக்கங்கள். வேடிக்கையான வீடியோக்களையோ அல்லது உங்களுக்கு பிடித்த நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுங்கள். இது மன அழுத்தத்தை குறைப்பதோடு உங்களின் இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
சிறிய நடை:
நீண்ட நேரம் உட்காருவது உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது இரத்த ஓட்டத்தை மெதுவாக்குகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை இது அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு மணி நேரமும் நிற்பது, கால்களை நீட்டுவது அல்லது வேகமாக நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சிறு நடை உங்களை புத்துணர்ச்சியாகவும் உணர வைக்கும்.
மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பு; அதை குறைக்க உதவும் 5 சிம்பிள் டிப்ஸ்!