காலையில் உடற்பயிற்சியா? அட! இந்த 'நேரத்துல' செய்றதால தான் நன்மை இருக்கு!!
Nighttime Exercise Benefits : இரவில் உடற்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது.
Nighttime exercise benefits in tamil
உடற்பயிற்சி செய்வது நம்முடைய உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. மன அழுத்தத்தில் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யும் போது வாழ்வின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்; மனநிலை சீராகும். ஆனால் குளிர்காலத்தில் காலையில் உடற்பயிற்சி செய்வது பலருக்கும் கடினமாக உள்ளது. வேலை, கல்வி போன்ற காரணங்களால் உடற்பயிற்சிக்கான காலையில் நேரம் ஒதுக்க முடியாமல் சில தவிக்கின்றனர். காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் மாலையில், இரவில் என உடற்பயிற்சியை தொடருகின்றனர். இதனால் உடலுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இங்கு காணலாம்.
Nighttime exercise benefits in tamil
தசை வலிமை:
மாலை நேரத்தில் நம்முடைய தசை உணர்திறன் அதிகமாக உள்ளது. இந்த நேரங்களில் உடற்பயிற்சி செய்யும் போது தசைகளின் வலிமையை அதிகரிக்க வாய்ப்பாக அமைகிறது. இரவு வேளைகளில் உடற்பயிற்சி செய்வது உங்களுடைய புரதச்சத்தை நன்கு உறிஞ்ச உதவுகிறது. உறுதியான தசைகளுக்கு இரவிக் உடற்பயிற்சி செய்யலாம்.
Nighttime exercise benefits in tamil
கார்டியோ பயிற்சி:
குளிர்காலத்தில் நீங்கள் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய கடினமாக இருக்கும். உங்களுடைய உடல் இறுக்கமாக இருப்பதால் உடற்பயிற்சி போது கடினமாக உணர்கிறீர்கள். இதற்கென அதிக ஆற்றலை செலவழிக்க வேண்டும். ஆனால் மாலை அல்லது இரவு நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உடல் தளர்வாக பயிற்சிகள் செய்ய ஏற்றவாறு அமையும். நீங்கள் தசைகளை வலிமையாக்கும் strength training போன்ற வலிமை பயிற்சிகளையும், கார்டியோ பயிற்சிகளையும் செய்ய இரவு வேளைதான் ஏற்றதாக இருக்கும்.
Nighttime exercise benefits in tamil
ஆழ்ந்த தூக்கம்:
இரவு நேரங்களில் உடற்பயிற்சி செய்வதால் புத்துணர்வாக உணர்வீர்கள். நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டால் இரவில் உடற்பயிற்சி செய்வது நல்லது. இது உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். ஒருவர் ஆழ்ந்து தூங்கினாலே அவருடைய மனநலம் மேம்படும். உடலில் பல வியாதிகள் கட்டுக்குள் வரும். தோல் பளபளப்பாக மாறும்.
இதையும் படிங்க: எந்த உடற்பயிற்சியா இருந்தாலும் 'இப்படி' பண்றது தான் நல்லது தெரியுமா?
Nighttime exercise benefits in tamil
தெளிவான சிந்தனை:
உடற்பயிற்சியின் போது மகிழ்ச்சி ஹார்மோன் எண்டோர்பின்கள் அதிகமாக சுரக்கிறது இதனால் உங்களுடைய மனநிலை மேம்பட்டு தெளிவான சிந்தனை பிறக்கும். இந்த ஹார்மோன் சுரப்பு சுயமரியாதையை அதிகரிக்கும். வலிகளுடன் மகிழ்வீர்கள். நீங்கள் இரவில் உடற்பயிற்சி செய்யும்போது மனநிலை சீராகிறது.
இதையும் படிங்க: இந்த '4' உடற்பயிற்சிகள் போதும்; இனி மன அழுத்தம் இருக்காது! ட்ரை பண்ணி பாருங்க..
Nighttime exercise benefits in tamil
உடல் எடை குறைப்பு:
பலர் என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் அவர்களுடைய எடை குறையாமல் இருப்பதற்கு தூக்கமின்மையே முக்கிய காரணம். இரவில் உடற்பயிற்சி செய்யும் போது ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதாலும், மன அழுத்தம் குறைவதாலும் உடல் எடை குறைகிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்துவிட்டு உடனே தூங்கக் கூடாது. தூங்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு உடற்பயிற்சிகளை செய்து முடித்து சற்று இளைப்பாறி விட்டு அதன் பின் தூங்க செல்ல வேண்டும்.