MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • எந்த உடற்பயிற்சியா இருந்தாலும் 'இப்படி' பண்றது தான் நல்லது தெரியுமா?

எந்த உடற்பயிற்சியா இருந்தாலும் 'இப்படி' பண்றது தான் நல்லது தெரியுமா?

Outdoor Exercise Benefits In Tamil : உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதுவே நாம் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்தால் அதன் பலன்கள் இரண்டு மடங்காக கிடைக்கும் தெரியுமா?

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 07 2024, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Outdoor Exercise Benefits In Tamil

Outdoor Exercise Benefits In Tamil

உடற்பயிற்சி என்ற வார்த்தை தற்போது நம் சாப்பிடும் உணவின் முக்கியத்துவத்தை விட மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகின்றது.   அதற்கு முக்கிய காரணம் நாம் கம்ப்யூட்டர் முன்பாக அதிக நேரம் செலவிடும் வேலை செய்கிறோம். இதுதவிர, செல்போன் மற்றும் டிவியையும் அதிக நேரம் பயன்படுத்துகிறோம். இப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்கின்றனர்.

உடற்பயிற்சி செய்வதினால் தசைகளில் அசைவை ஏற்படுத்தி உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவுகின்றது. நடைப்பயிற்சி, சைக்கிள், ஓடுதல், நீச்சல் என உடற்பயிற்சியில் பல வகைகள்கள் உள்ளன. உடற்பயிற்சியை காலை அல்லது மாலை செய்யலாம். ஆனால் பொதுவாக பெரும்பாலானோர் காலையில் தான் உடற்பயிற்சி செய்ய விரும்புவார்கள். நாம் தினமும் காலை உடற்பயிற்சி செய்து வந்தால் உடலுக்கு எக்கச்சக்கமான நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்.

25
Outdoor Exercise Benefits In Tamil

Outdoor Exercise Benefits In Tamil

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் In-door உடற்பயிற்சி செய்வதில் தான் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். In-door என்பது ஜிம் அல்லது உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சி செய்வதாகும். ஆனால் இப்படி நான்கு சுவர்களுகுள்ளே இருந்து உடற்பயிற்சி செய்வதை பார்க்கிலும் விளையாட்டு மைதானம், பார்க், பீச் போன்ற இடங்களில் இயற்கை காற்றை சுவாசித்தபடியே திறந்தவெளியில் (Out-door) உடற்பயிற்சி செய்து வந்தால் அதன் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.  

திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வதினால் நம்முடைய உடல் நலம் மட்டுமின்றி, மனநலத்தையும் பெரிதும் காக்கும். அந்த வகையில் இப்போது திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்து வந்தால் மன நலம் காக்க நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

35
Outdoor Exercise Benefits In Tamil

Outdoor Exercise Benefits In Tamil

திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் :

1. திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்து வந்தால் நம் உடலுக்கு அதிக அளவு புத்துணர்ச்சி கிடைக்கும். இதன் மூலம் ஒரு தனித்துவமான மன ஆரோக்கியத்தை பெறலாம். சொல்லப் போனால் திறந்து வெளி உடற்பயிற்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஒரு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதை நாம் உணரவும் முடியும்.

2. திறந்தவெளி உடற்பயிற்சியானது நம் உடலில் என்டார்ஃபின் என்னும் ஃபீல் குட் என்ற ஹார்மோன் உற்பத்தியின் அளவை அதிகரிக்க செய்ய பெரிதும் உதவுகின்றது. இந்த ஹார்மோன் அதிகரிப்பால் நம்முடைய மன நிலையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பதால், நாம் எப்போதுமே மகிழ்ச்சியாகவே இருக்க முடியும். 

45
Outdoor Exercise Benefits In Tamil

Outdoor Exercise Benefits In Tamil

3. திறந்தவெளி உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளையின் செயல்பாடு கூர்மையாக ஈடுபடும். இதனால் நம்முடைய நினைவாற்றலானது அதிகரிக்கும். அதுமட்டுமின்றி நம்முள் இருக்கும் படைப்பாற்றலை ஊக்குவிக்க இது பெரிதும் உதவுகின்றது.

4. திறந்தவெளி உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸீடன் தொடர்புடைய கார்ட்டிசா என்ற ஹார்மோன் உற்பத்தியின் அளவை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. மேலும் மனதிற்கு அமைதியான உணர்வை தூண்ட உதவுகின்றது.

இதையும் படிங்க:  கொழு கொழு கன்னங்களை மெலிந்த தோற்றத்திற்கு கொண்டு வர 'இதை' மட்டும் பண்ணுங்க!!

55
Outdoor Exercise Benefits In Tamil

Outdoor Exercise Benefits In Tamil

5. திறந்தவெளி உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் இரவல் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அதாவது நம்முடைய மூளையும் உடலும் ஒன்றாக இணைந்து செயல் புரிந்து நம் உடலுக்கு தேவையான ஓய்வை கொடுக்கும் மற்றும் நம்மை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். மேலும் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்யும் போது நம்முடைய உடலில் படும் இயற்கை வெளிச்சத்தால் மூளையின் செயல்பாட்டை மாற்றி அமைத்து, அவற்றின் மூலம் நல்ல தூக்கம் பெற உதவுகின்றது. இது தவிர, திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்யும் போது பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பு சுலபமாக கிடைக்கும்.

மேலே சொன்ன நன்மைகளை நீங்கள் பெற விரும்பினால், இயற்கை காற்றோட்டத்தில் திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்!!

இதையும் படிங்க:  உடற்பயிற்சி செய்த பின் இந்த ஒரு தப்ப மட்டும் பண்ணாதீங்க.. இல்லனா பிரச்சினை தான்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved