Tamil serial TRP
சின்னத்திரை சீரியல்களுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக வாரத்தின் 7 நாட்களுக்கு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பது அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் இரண்டாவது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் எந்தெந்த சீரியல்கள் என்ன இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
Ethirneechal 2 Serial
அதன்படி 10வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. கடந்த வாரம் 9ம் இடம் பிடித்திருந்த இந்த சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 6.50 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. அதேபோல் சன் டிவியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் 2 சீரியல் ஒளிபரப்பான முதல் வாரம் 7ம் இடம் பிடித்திருந்தது. அடுத்த வாரம் 8ம் இடத்துக்கு தள்ளப்பட்டு, இந்த வாரம் மேலும் பின் தங்கி, 9-ம் இடத்தை பிடித்திருக்கிறது. அந்த சீரியலுக்கு 6.52 புள்ளிகள் கிடைத்துள்ளன.
இதையும் படியுங்கள்... யார்ரா இந்த பையன்? டிஆர்பி-யில் சக்கைபோடு போடும் பிரபல சீரியலின் நாயகனா இது!
Top 10 serial TRP
கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், இந்த வாரம் 2 இடங்கள் முன்னேறி 6.54 டிஆர்பி புள்ளிகளுடன் 8ம் இடத்தை பிடித்திருக்கிறது. அடுத்ததாக இராமாயணம் தொடர் 7.56 புள்ளிகளுடன் 7-ம் இடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த வாரம் நான்கு மற்றும் 5ம் இடத்தில் இருந்த மருமகள் மற்றும் அன்னம் ஆகிய சீரியல்கள் இந்த வாரம் ஒரு இடம் பின் தங்கி உள்ளன. அதன்படி 6-ம் இடத்தில் உள்ள அன்னம் சீரியலுக்கு 7.70 டிஆர்பியும், 5-ம் இடத்தில் உள்ள மருமகள் சீரியலுக்கு 8.03 டிஆர்பியும் கிடைத்துள்ளது.
Top 10 Tamil Serial TRP Rating
வழக்கமாக முதல் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் ஆக்கிரமித்து இருக்கும். ஆனால் இந்த வாரம் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலும் டாப் 4க்குள் நுழைந்துள்ளது. அந்த சீரியல் 8.19 டிஆர்பி உடன் 4ம் இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள மூன்று இடங்களையும் சன் டிவியின் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல் ஆகிய சீரியல்கள் பிடித்துள்ளன. இதில் மூன்றாம் இடத்தில் உள்ள கயல் சீரியலுக்கு 9.00 டிஆர்பியும், இரண்டாம் இடம் பிடித்துள்ள மூன்று முடிச்சு சீரியல் 9.19 புள்ளிகளையும், முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியல் 9.21 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்... பார்க்க தான் டம்மி; ஆனா முத்துக்குமரன் வென்ற பிக் பாஸ் டிராபியில் இத்தனை சிறப்பம்சங்களா?