பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் எஸ்.கே.25 திரைப்படத்தின் டைட்டில், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கு.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான 'அமரன்' படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து, தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் தான், எஸ்.கே.25. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் டான் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.
25
Jayam Ravi Play Antagonists
கடந்த ஆண்டு பிரமாண்ட பூஜையோடு துவங்கப்பட்ட இந்த படத்தில், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறார்கள். குறிப்பாக இதுவரை ஹீரோவாக நடித்து வந்த ஜெயம் ரவி, SK 25 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். அதே போல் அதர்வா முரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடித்து வருகிறார். இதுவரை தெலுங்கு படங்களில் மட்டுமே அதிகம் தலைகாட்டி வந்த ஸ்ரீலீலா இந்த படத்தின் மூலம் தமிழ் படத்திலும் அறிமுகமாக உள்ளார்.
எஸ்.கே.25 திரைப்படம், இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து இயக்க இருந்த புறநானூனு படத்தின் கதை என கூறப்பட்டது. பின்னர் திரையுலகை சேர்ந்த சிலர், இது புறநானூறு கதை இல்லை என்றும், 1965-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் என கூறப்பட்டது. அதே போல் பல தலைப்புகள் சமூக வலைத்தளத்தை சுற்றி வந்த நிலையில், இப்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
45
Parasakthi Movie
அதன்படி தற்போது, சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைந்து பணியாற்றி வரும் இந்த படத்திற்கு சிவாஜி கணேசனின் சூப்பர் ஹிட் படமான 'பராசக்தி' என பெயரிடப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் திரையுலக வாழ்க்கையில், மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த 'பராசக்தி' திரைப்படம் 1952-ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா பஞ்சு இயக்கத்தில் வெளியானது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தார். அதே போல் இந்த படத்தின் மூலம் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த சிவகார்த்திகேயன் படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் 100வது திரைப்படம், சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகும், இந்த படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ.50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவிக்கு ரூ.20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.