Bigg Boss Muthukumaran
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6ந் தேதி தொடங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ந் தேதி நிறைவடைந்தது. 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மக்கள் மனதை வென்று அதிக வாக்குகளை பெற்ற முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவரின் வெற்றி ஒரு சாமானியனுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வென்ற முத்துக்குமரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Bigg Boss Title Winner Muthukumaran
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு டிராபி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 7 சீசன்களாக தங்க முலாம் பூசப்பட்டு பளபளவென ஜொலிக்கும் டிராபியை வெற்றியாளர்களுக்கு வழங்கிய பிக் பாஸ் குழுவினர், இந்த சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட முத்துக்குமரனுக்கு வெள்ளை நிறத்தில் ஒரு டிராபியை கொடுத்தனர். அந்த டிராபியின் புகைப்படம் வெளியானபோது இது ராகு கேது சிலை போல் இருப்பதாக நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வந்தனர்.
Bigg Boss Trophy
இப்படி நெட்டிசன்கள் சரமாரியாக கிண்டலடித்த அந்த டிராபியில் ஒளிந்திருக்கும் சிறப்பம்சங்களை முத்துக்குமரன் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது : “பிக் பாஸ் டிராபியை முதன்முதலில் பார்த்தபோது அது தங்கமா அல்லது வெள்ளியா என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. எனக்கு பார்க்கும் போது அது மக்களின் அங்கீகாரமாக தான் தெரிந்தது. எனக்கு வழங்கப்பட்ட டிராபி மிகவும் அழகானது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா உடன் கல்யாணம் எப்போ? அருண் சொன்ன குட் நியூஸ்
Muthukumaran, vijay sethupathi
இதற்கு முன்னர் நடந்த சீசன்களில் டைட்டில் வின்னர்களுக்கு தங்க முலாம் அல்லது வெள்ளி முலாம் பூசப்பட்ட டிராபிகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் எனக்கு வழங்கப்பட்ட டிராபி, முழுக்க முழுக்க ஒரே கல்லில் செய்யப்பட்டது. ரொம்ப அழகா அதை செதுக்கி இருந்தார்கள். உதாரணத்திற்கு பிள்ளையார்பட்டியை எடுத்துக்கொண்டால், அங்குள்ள குடவரை கோவிலின் சிறப்பு என்னவென்றால் அது ஒரே மலையை குடைந்து செய்யப்பட்ட கோவில் அது.
Bigg Boss Trophy Controversy
கற்களில் சிற்பங்கள் செய்வது நம் பாரம்பரியத்தின் படி மிகவும் அழகானது. மற்ற நாடுகளை விட நம்ம ஊர்களில் உள்ள கோவில்களில் தான் யாழியாக இருந்தாலும் சரி, பெண்களின் ஜடையாக இருந்தாலும் சரி, அதை கற்களால் செதுக்குவது மிகவும் கடினம். அது நம்மூரில் தான் உள்ளது. வெளிநாட்டவர்களே வந்து அந்த கலை சிற்பங்களை ரசிக்கிறார்கள். அப்படி பாரம்பரியத்தோட செஞ்சது தான் எனது பிக் பாஸ் டிராபி. அந்த கோப்பையின் கணம் அதிகம். அதை தூக்கவே முடியாது. ரொம்ப அழகா செதுக்கி இருந்தார்கள்.
Hidden Details about Bigg Boss Trophy
உண்மையிலேயே தங்கமுலாம் பூசி கொடுத்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக இருந்திருக்குமா என்பது தெரியாது. நிஜமா சொல்றேன், இந்த 8 சீசன்களில் எனக்கு வழங்கப்பட்ட டிராபி தான் மிகவும் கலைத்துவமானது” என முத்துக்குமரன் கூறியதை பார்த்த ரசிகர்கள் பார்க்க டம்மியாக தெரிந்தாலும், அதனுள் இத்தனை சிறப்பம்சங்கள் இருக்கிறதா என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் முடிந்த கையோடு அன்ஷிதாவுக்கு விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!