இம்புட்டு பிசியாக உள்ள நடிகை திரிஷா, விரைவில் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இதுபற்றி பேசியுள்ள அவர், திரிஷாவுக்கு சினிமாவில் நடித்து மிகவும் போர் அடித்துவிட்டது மட்டுமின்றி அவருக்கு மனச்சோர்வும் ஏற்பட்டிருப்பதாக கூறி இருக்கிறார். அதன் காரணமாக அவர் இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.