Sundar C Birthday Party
காமெடி படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கிய மதகஜராஜா திரைப்படம் சுமார் 12 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகி சக்கைப் போடு போட்டது. மதகஜராஜா படத்தின் வெற்றியால் செம குஷியில் இருக்கும் இயக்குனர் சுந்தர் சி, அண்மையில் தன்னுடைய 57வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக அவர் நடத்திய பார்ட்டியில் ஒட்டுமொத்த கோலிவுட்டே படையெடுத்து வந்து கலந்துகொண்டது.
Sundar C Birthday Party Photos
சுந்தர் சி-யின் பர்த்டே பார்ட்டியில் நடிகர் சுப்பு பஞ்சு, தொகுப்பாளினி டிடி, நடிகை மீனா, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் நடிகை குஷ்பு உடன் எடுத்த அழகிய புகைப்படம் இது.
80S stars at Sundar C Birthday Party
சுந்தர் சி பர்த்டே பார்ட்டியில் 80ஸ் ரீ-யூனியனும் அரங்கேறியது. 80ஸில் கொடிகட்டிப் பறந்த நாயகிகளான சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும், நடிகர் மைக் மோகனும் கலந்துகொண்டனர். அவர்களுடன் நடிகை குஷ்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.
yogibabu in Sundar C Birthday Party
தற்போது டிரெண்டிங்கில் உள்ள நகைச்சுவை நடிகரான யோகிபாபு, சுந்தர் சி பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்டபோது வைகைப்புயல் வடிவேலு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் விமல் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.
sneha attend Sundar C Birthday Party
சுந்தர் சி-யின் பர்த்டே பார்ட்டியில் புன்னகை அரசி சினேகாவும் கலந்துகொண்டார். இவர்கள் இருவரும் முரட்டுக் காளை திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Khushbu and Sundar C
இயக்குனர் சுந்தர் சி-க்கு அவருடைய காதல் மனைவி குஷ்பூ அன்புடன் முத்தம் கொடுத்தது மட்டுமின்றி தன் கணவரின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் கேக் ஒன்றையும் வெட்டி அன்பை பகிர்ந்துகொண்டார்.
vishal and Maniratnam in Sundar C Birthday Party
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனரான மணிரத்னம், சுந்தர் சி-யின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவருடன் நடிகர் விஷால் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.
இதையும் படியுங்கள்... பொங்கல் ரிலீஸ் படங்களின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட்