தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஒரு சில நடிகர்களில் சீயான் விக்ரமும் ஒருவர். தனித்துவமான கதைகளையும், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதில் வல்லவரான விக்ரம், நடிப்பில் கடைசியாக வெளியான தங்கலான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பொதும் , பா ரஞ்சித் இந்த படத்தின் திரைக்கதையை சரியாக கொண்டு செல்லாதது, இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் கூறி வந்தனர்.
25
Vikram Thangalaan movie
படம் தோல்வியை தழுவினாலும் வசூல் ரீதியாக 100 கோடியை எட்டியது. அதே போல் விக்ரமின் நடிப்பையும் ரசிகர்கள் மனம் திறந்து பாராட்டி இருந்தனர். தங்கலான் தோல்விக்கு பின்னர், இந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் ரிலீசாக காத்திருக்கும் திரைப்படம் தான் 'வீர தீர சூரன் - பார்ட் 2'. சீயான் விக்ரம் இந்த படத்தில் அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதத்தின் இறுதியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி இந்த திரைப்படம் மார்ச் மாதம் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. மார்ச் 28-ஆம் தேதி, ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியுள்ள ஜீனி திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
45
Vikrams Veera Dheera Sooran film update out
விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் பார்ட் 2' திரைப்படத்தை, இயக்குனர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கி உள்ளார். துஷரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார், சி. எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. பொதுவாக முதல் பாக படங்கள் ரிலீஸ் ஆன பின்னரே 2-ஆவது பாகம் ரிலீஸ் ஆகும். ஆனால் இந்த படத்தின் இரண்டாவது பாகம் ரிலீஸ் ஆன பின்னர் முதல் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் படத்தில் அண்ணன் - தம்பியா நடித்த ஜெயம் ரவி - விக்ரமின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ரசிகர்கள் மனதை கவர உள்ளது, ஜீனியா அல்லது வீர தீர சூரனா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.