உதயநிதி திருமணத்தில் சமையல் வேலை செய்த தேசிய விருது நடிகர்! யார் தெரியுமா?
நடிகர் உதயநிதி ஸ்டாலின் கல்யாணத்தில் நான் தான் அரைவை மாஸ்டராக வேலை பார்த்தேன் என்று நடிகர் அப்புக்குட்டி பேசி இருக்காரு.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் கல்யாணத்தில் நான் தான் அரைவை மாஸ்டராக வேலை பார்த்தேன் என்று நடிகர் அப்புக்குட்டி பேசி இருக்காரு.
தூத்துக்குடி மாவட்டம் நாதன் கினறு என்ற கிராமத்தைச் பிறந்தவர் தான் சிவபாலன். சினிமாவுக்கு வந்ததுக்கு அப்பறம் அப்புக்குட்டினு மாத்திக்கிட்டாரு. இவருடைய முதல் படம் மறுமலர்ச்சியாக இருந்தாலும் கூட, தீபாவளி படம் தான் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துச்சு. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒன்பது ரூபாய் நோட்டு, நீ நான் நிலா என்று பல படங்களில் நடித்தார். இந்தப் படங்களை விட சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன், சூரி, அப்புக்குட்டி ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் எப்படி சூரிக்கு பரோட்டா சூரி என்ற அடையாளத்தை கொடுத்ததோ அதே போன்று சிவபாலனுக்கும் அப்புக்குட்டி என்ற அடையாளத்தை கொடுத்துச்சு. ஏனென்றால் இந்தப் படத்தில் அப்புக்குட்டி என்ற கேரக்டர்ல தான் இவர் நடிச்சிருந்தாரு. இந்தப் படம் கொடுத்த வரவேற்பு காரணமா அடுத்தடுத்த படங்களில் நடித்தார். காமெடி ரோலுக்கு மட்டுமின்றி ஹீரோவாகவும் நடித்தார் அப்புக்குட்டி. இவருடைய நடிப்பில் வெளியான அழகர்சாமியின் குதிரை படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அஜித்தின் வீரம், வேதாளம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
ஜமீன் குடும்பத்தில் இண்டர்கேஸ்ட் மேரேஜ் - ஸாரி சொல்லிட்டு போனவர்தான்: பி ஆர் வரலட்சுமி பர்சனல்!
தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் பிறந்தநாள் வாழ்த்துகள் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது. ஆனால், எப்போது என்று அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அப்புக்குட்டி ஆச்சரியப்பட வைக்கும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது அப்பு குட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில சமையலுக்கு உதவி பண்ணும் அரைவை மாஸ்டரா ஒர்க் பண்ணுனாராம்.
இது பற்றி ரொம்ப எமோஷனலா பேசி இருக்குற அப்பு குட்டி, ஆரம்பத்துல சென்னை வந்த புதிதில் ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்தேன். அங்கிருந்து கேட்டரிங் சர்வீஸூக்கு சென்றேன். இவ்வளவு ஏன், உதயநிதி ஸ்டாலின் திருமணத்தில் நான் அரைவை மாஸ்டராக பணியாற்றினேன். அங்க கூட்டம் வந்துகிட்டே இருந்துச்சு ஒரு கட்டத்துல என்னால முடியலன்னு சொல்லிட்டேன். ஆனால் நீ தான் அரைக்கனும்னு சொல்லிட்டாங்கனு பேசி இருக்கிறார்
.
பறிபோகும் சைஃப் அலிகானின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துக்கள்; அரண்மனை உள்பட எல்லாம் காலி!
இதையடுத்து தான் பட வாய்ப்பு வந்தது. அதுவும் பெரியளவில் இல்லை. ஒரு சில காட்சிகள் தான். மறுமலர்ச்சி, சொல்ல மறந்த கதை, கில்லி, மாயாவி, அழகிய தமிழ் மகன், தீபாவளி என்று நடித்தேன். ஆனால், வெண்ணிலா கபடி குழு தான் நல்ல அங்கீகாரம் கொடுத்தது. அந்தப் படத்தில் மாமியாரின் மட்டையை உடைக்கும் காட்சி தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்றார். நான், சிறுவயதாக இருக்கும் போது அம்மா இறந்துட்டாங்க. அப்பா நான் நடிச்ச மறுமலர்ச்சி படத்தை பார்த்தாங்க. ஆனால், பெரியதாக ஒன்றும் சொல்லவில்லை. ஒரு சீன் தான். அவர் ஒரு கற்பனையில் வந்தாங்க என்று பேசிய அப்புக்குட்டி கடைசியாக இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அப்புக்குட்டி இன்னும் நேரம் வரவில்லை. பெண் பார்த்துக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.