PR Varalakshmi Old Movies
சினிமாவில் 3 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் நடிகை பி ஆர் வரலட்சுமி. 1971 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கெட்டிக்காரன் என்ற படம் மூலமாக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் மறைந்த முன்னாள் ஆந்திரா முதல்வர் ராமாராவ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
PR Varalakshmi Acting More Movies
இவர் நடிப்பில் வெளியான கெட்டிக்காரன், குலமா குணமா, வாழையடி வாழை, பொன்வண்டு, தெய்வ வம்சம், நான் அவனில்லை, சினிமா பைத்தியம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 1971 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் செல்வி, அரசி, செல்லமடி நீ எனக்கு, சுந்தரி, அம்மன், தேன்மொழி பி ஏ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் இவர் அளித்த பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசியிருக்கிறார்.
Jameen Family
அதில், அவர் கூறியிருப்பதாவது: "நாங்கள் பெரிய ஜமீன் குடும்பம். என்னுடைய தாத்தா பள்ளிக்கூடம், காலேஜ் என்று நிறைய கட்டியிருக்கிறார். என்னுடைய அப்பா ராமச்சந்திர நாயுடு, ஒரு சில படங்களை தயாரித்திருக்கிறார். அதனால், அவருக்கு சினிமா பற்றி நிறைய தெரியும். அண்ணன், அக்கா, தங்கை என்று எங்களுடைய வீட்டில் மொத்தம் 7 பேர். நான் சிறு வயதாக இருக்கும் போதே என்னை சாவித்திரி மாதிரி இருப்பதாக நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.
பிக் பாஸ் முடிந்த கையோடு அன்ஷிதாவுக்கு விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!
Sundhari Serial Actress
அவர்கள் சொல்லவதையெல்லாம் கேட்டு கேட்டு எனக்கும் சினிமா மீது ஆசை வந்தது. ஆனால், என்னுடைய வீட்டில் ஓகே சொல்லமாட்டார்களே என்று பயந்தேன். கடைசில எனக்கு தர்ம பத்தினி என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தில் நடித்த பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்தேன். தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்துக் கொண்டிருந்த போது தான் என்னுடைய கணவரை நான் சந்தித்தேன். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டோம். ஆனால், கல்யாணம் பண்ணிக்கிட்டது எங்க வீட்டுக்கு பிடிக்கல. எங்களோடது இண்டர்கேஸ்ட் மேரேஜ். ஜாமீன் குடும்ப என்பதால் என்னுடைய திருமணத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
PR Varalakshmi Sad Story
திருமணத்திற்கு பிறகு, குழந்தை பிறந்தது. 10 வருடங்களாக நான் சினிமாவில் நடிக்கவில்லை. அதன் பிறகு பூவே உனக்காக, ஜமீன்கோட்டை, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, படை வீட்டு அம்மன் என்று பல படங்களில் நடித்தேன். என்னுடைய கணவருக்கும், என் வீட்டுக்கும் அடிக்கடி சண்டை வந்தது. என்னுடைய குடும்பத்தினரை சமாளிக்கவே முடியல. அதனால் ஒருநாள் சாரி என்று சொல்லிவிட்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டார். அவரை நினைத்து கொண்டு இப்போது வரையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று சொல்ல முடியும். அந்த நம்பிக்கையில் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீல் சேரில் அழைத்து செல்லப்பட்ட ராஷ்மிகா - செல்லத்துக்கு என்னாச்சு? பதறிப்போன ரசிகர்கள்