Archana, Arun
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடைசியாக நடந்து முடிந்த 8-வது சீசனை மட்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பிக் பாஸ் முடிந்ததும் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.
Arun Prasath
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களுள் அருண் பிரசாத்தும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடித்து பாப்புலர் ஆன இவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் எண்ட்ரி ஆனதும், முதல் 4 வாரம் அமைதி காத்து வந்தார். பின்னர் தான் தன்னுடைய சுயரூபத்தை காட்டினார். குறிப்பாக முத்துக்குமரனை டார்கெட் செய்த அவர், ஒருகட்டத்தில் தன்னுடைய தவறை திருத்திக் கொண்டு, அனைவருடனும் பாசமாக பழக ஆரம்பித்தார்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 2-வுக்கு ரெடியா? தொகுத்து வழங்கப்போவது யார்?
Arun Prasath Lover Archana
இவர் பிக் பாஸ் சீசன் 8-ல் பைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பைனலுக்கு முந்தைய வாரம் எலிமினேட் ஆகி வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அருண் பிரசாத் வர முக்கிய காரணமாக இருந்தது அவரது காதலி அர்ச்சனா தான். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இதில் அர்ச்சனா கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டிலையும் தட்டிதூக்கினார்.
Arun Prasath Marriage Update
பிக் பாஸ் சீசன் 8-ன் பேமிலி ரவுண்டின் போது உள்ளே வந்த அர்ச்சனா, அருண் பிரசாத் உடனான காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் உலா வந்த நிலையில், அருண் பிரசாத்தே சமீபத்திய பேட்டியில் தன்னுடைய திருமணம் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். அதன்படி வீட்டில் திருமணத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக கூறிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் அர்ச்சனாவை கரம்பிடிக்க உள்ளதாக அறிவித்து இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் முடிந்த கையோடு அன்ஷிதாவுக்கு விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!