பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 2-வுக்கு ரெடியா? தொகுத்து வழங்கப்போவது யார்?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அண்மையில் முடிவடைந்த நிலையில், விரைவில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
Bigg Boss Ultimate
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி, ராஜு, அசீம், அர்ச்சனா, முத்துக்குமரன் ஆகிய 8 பேர் டைட்டில் வென்றிருக்கிறார்கள். இந்த 8 சீசனில் முதல் 7 சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருந்தார். அவர் 8வது சீசனில் இருந்து விலகியதால், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அந்த சீசனை தொகுத்து வழங்கினார்.
Simbu
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அண்மையில் முடிவடைந்த நிலையில், விரைவில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. பிக் பாஸ் அல்டிமேட் என்பது ஓடிடி தளத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டும் தான் ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஐந்து சீசனில் இருந்து குறிப்பிட்ட சில போட்டியாளர்கள் வந்து கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... அர்ச்சனாவுக்கு பரிசை அள்ளி கொடுத்த பிக் பாஸ்; முத்துக்குமரனுக்கு கிள்ளி கொடுத்தது ஏன்?
BB Ultimate Season 1
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் சீசனின் முதல் நான்கு வாரத்தை மட்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன்பின்னர் அவர் ஷூட்டிங்கில் பிசியானதால், அவருக்கு பதில் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார். வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். நிரூப்பிற்கு இரண்டாம் இடமும், தாமரைச் செல்விக்கு மூன்றாம் இடமும் கிடைத்தது.
BB Ultimate season 2
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் அந்நிகழ்ச்சி முதல் சீசனோடு நிறுத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் இரண்டாவது சீசன் நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை நடத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியை சிம்புவுக்கு பதில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டிராபி வென்ற பின் முத்துக்குமரன் வீடியோ வெளியிட்டு சொன்ன விஷயம் என்ன?