
திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், சமீப காலமாக அடுத்தடுத்து தங்களின் விவாகரத்தை அறிவித்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வரிசை கட்டி பிரபலங்கள் விவாகரத்து பெற்று பிரிந்தாலும், உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தனது மனைவியை 29 வருடத்திற்கு பின்னர் பிரிவதாக அறிவித்த செய்தி தான். அதே போல் இதுவரை அமலா பால், சமந்தா, தனுஷ், ஜிவி பிரகாஷ் போன்ற பலரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.
கடந்த ஆண்டு நடிகர் ரவி மோகன் தனது விவாகரத்து முடிவை அறிவித்த நிலையில், இதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளார். ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா உடன் கல்யாணம் எப்போ? அருண் சொன்ன குட் நியூஸ்
இந்த நிலையில் தான் இப்போது மலையாள சினிமாவிலும் விவாகரத்து செய்திகள் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் மலையாள நடிகை அபர்ணா வினோத் தனது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார். கேரள மாநிலம், கொச்சியில் பிறந்து வளர்ந்தவர் நடிகை அபர்ணா வினோத். எம்.எஸ்சி உளவியல் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணா வினோத், நிவின் பாலி நடித்த 'நான் நின்னோடு கூடேயுண்டு' என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கோஹினூர் படத்தில் நடித்தார். இந்த படம் தான் மலையாளத்தில் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
இதையடுத்து மலையாளத்தில் வாய்ப்பு இல்லாத நிலையில் தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'பைரவா' படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்திருந்தார். அதன் பிறகு பரத் நடிப்பில் வெளியான நடுவண் என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால், பெரியளவில் இவருக்கு தமிழில் வாய்ப்புகளும் வரவேற்பும் இல்லாத நிலையில் 2022 ஆம் ஆண்டு, நவம்பர் 28ஆம் தேதிதன்னுடைய காதலர் ரினில் ராஜ் என்பவரை திருமணம் செய்து செட்டி ஆனார். திருமணமாகி 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் இப்போது தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார்.
உதயநிதி திருமணத்தில் சமையல் வேலை செய்த தேசிய விருது நடிகர்! யார் தெரியுமா?
உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதாக சமூக ஊடகங்கள் வழியாக ரசிகர்களுக்குத் தெரிவித்தார். கணவர் ரினில் ராஜ் பி.கே-விடமிருந்து பிரியும் முடிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். தனது திருமணத்தை "வாழ்க்கையின் கடினமான கட்டம்" என்று குறிப்பிட்ட நடிகை, "உணர்ச்சிகள் வற்றிய" அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
விவாகரத்து பற்றி அவர் கூறுகையில், "அன்பு நண்பர்கள் மற்றும் என்னை பின் தொடரும் பாலோவர்களே எனது வாழ்க்கையில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆழ்ந்த யோசனைக்கு பிறகு எனது திருமண உறவி முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. நான் வளரவும், மகிழ்ச்சியாகவும் இருக்கவும் இந்த முடிவு தான் சரியானது என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், எனது திருமண வாழ்க்கை உணர்வு நீதியாக வடிகட்டிய கடினமான வாழ்க்கையாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவு என்று குறிப்பிட்ட அபர்ணா வினோத் கடைசியாக உங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஜமீன் குடும்பத்தில் இண்டர்கேஸ்ட் மேரேஜ் - ஸாரி சொல்லிட்டு போனவர்தான்: பி ஆர் வரலட்சுமி பர்சனல்!