யார்ரா இந்த பையன்? டிஆர்பி-யில் சக்கைபோடு போடும் பிரபல சீரியலின் நாயகனா இது!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலின் நாயகன் ஒருவர் சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vetri vasanth
சின்னத்திரை சீரியல்கள் என்றாலே பெண்கள் மட்டும் தான் பார்ப்பார்கள் என்கிற நிலை மாறி தற்போது சிறிசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் பரபரப்பான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை உடன் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சீரியலின் நாயகன் குழந்தைப் பருவத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அது யார் என்பதை பார்க்கலாம்.
Serial Actor vetri vasanth
அது வேறுயாருமில்லை, சிறகடிக்க ஆசை சீரியலின் நாயகன் விஜய் வசந்த் தான். இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் காதல் திருமணம் செய்துகொண்டதைப் போல், நிஜத்திலும் லவ் மேரேஜ் தான் செய்து கொண்டார் வெற்றி வசந்த். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியலில் நாயகியாக நடித்து வரும் வைஷ்ணவி என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பார்க்க தான் டம்மி; ஆனா முத்துக்குமரன் வென்ற பிக் பாஸ் டிராபியில் இத்தனை சிறப்பம்சங்களா?
Vetri Vasanth Vaishnavi Marriage Photo
இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து கடந்த ஆண்டு வெற்றி வசந்த் - வைஷ்ணவி ஜோடியின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஏராளமான விஜய் டிவி பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை குறுகிய காலத்தில் கவர்ந்திழுத்த வெற்றி வசந்த், சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
Siragadikka Aasai Serial Hero Vetri Vasanth
சீரியல் நட்சத்திரங்களுக்கென சமூக வலைதளங்களில் ஃபேன் பேஜ் ஆரம்பித்து அதில் அவர்களைப் பற்றி பதிவிட்டு வரும் நெட்டிசன்கள் அண்மையில் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த் குழந்தைப் பருவ புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர். தற்போது இருக்கும் புகைப்படத்தையும், அவரின் சிறுவயது புகைப்படத்தையும் ஒப்பிட்டு, ஆள் அடையாளமே தெரியவில்லை என இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படங்களுக்கு லைக்கும் குவிந்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா உடன் கல்யாணம் எப்போ? அருண் சொன்ன குட் நியூஸ்