நீலகிரி அரசு மருத்துவமனையில் தொழில் சிகிச்சை நிபுணர், சமூக பணியாளர், நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நீலகிரி அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த மருத்துவமனியில் செயல்படும் ஆரம்ப சிகிச்சை மையத்தில் தொழில் சிகிச்சை நிபுணர், சமூக பணியாளர், நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
கல்வித்தகுதி :
தொழில்சார் சிகிச்சையாளர் : இந்த பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை / முதுகலை தொழில்சார் சிகிச்சையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சமூகப் பணியாளர் : இந்த சமூகப் பணியில் MSW படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்
UGC-அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவுசார் இயலாமையில் சிறப்பு கல்வியில் இளங்கலை / முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அந்த நபர் செல்லுபடியாகும் எண்ணுடன் நேரடி RCI (இந்திய மறுவாழ்வு கவுன்சில்) பதிவை வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 23,000 - ரூ.23,000 வரை
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகளின் நகல்கள்:-
1. பிறப்புச் சான்றிதழ்
2. எஸ்எஸ்எல்சி/எச்எஸ்சி மதிப்பெண் பட்டியல்
3. பட்டம்/முதுகலைப் பட்டம்
விண்ணப்பித்த பதவிக்கான சான்றிதழ்
4. ஆதார் அட்டை/வாக்காளர் ஐடி
5. சமூகச் சான்றிதழ்
6. முன்னுரிமை/அனுபவத்திற்கான சான்றிதழ்
7. பிற தொடர்புடைய சான்றிதழ்கள்.
நிபந்தனைகள்
இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.
எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர், இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது என்பதை ஒப்பந்த அடிப்படையில் அறிந்திருப்பதற்கும், சேவைகள் எந்தக் காரணத்திற்காகவும் நிரந்தரமாக்கப்படாது என்றும், நிரந்தரமாக பணியமர்த்தப்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும், 11 மாதங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கும் ஒரு "தனிப்பட்ட பிரகடனம் படிவத்தை" சமர்ப்பிக்க வேண்டும்.
மிஸ் பண்ணாதீங்க.! இன்டர்வியூ போனாலே போதும் வேலை உறுதி.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சுகாதார அலுவலர் / நிர்வாகச் செயலாளர்,
மாவட்ட சுகாதாரச் சங்கம்
மாவட்ட சுகாதார அலுவலகம்,
எண்.38, ஜெயில் ஹில் சாலை, உதகமண்டலம்
நீலகிரி மாவட்டம்.