மிஸ் பண்ணாதீங்க.! இன்டர்வியூ போனாலே போதும் வேலை உறுதி.! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்காக சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலை தேடும் இளைஞர்கள்
தமிழகத்தில் மட்டும் பல ஆயிரம் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐடிஐ என குவிந்து கிடக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் பேர் படித்து முடித்து வேலை தேடி வெளி உலகத்திற்கு வருகிறார்கள். அந்த வகையில் அரசு பணியை குறியாக வைத்து இரவு பகல் முழுவதுமாக படிக்கும் இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலமும் பல ஆயிரம் பேர் பணியில் சேர்கிறார்கள். எனவே அரசு பணிக்கு தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்பையும் தமிழக அரசு நடத்தி வருகிறது.
job
வேலை வாய்ப்பு முகாம்
மேலும் பல லட்சம் பேருக்கு அரசு பணியில் வேலை கொடுக்க முடியாத காரணத்தால் தனியார் துறையோடு இணைந்து வேலை இல்லாதவர்களுக்கு உதவிடும் வகையில் சிறப்பு முகாமையும் நடத்தி வருகிறது. இதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வாரம் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அந்த வகையில் மாவட்டம் தோறும் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் நுற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு பல லட்சம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறுது. அந்த வகையில் சென்னையில் நாளை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
job opportunities
தனியார் துறை வேலைவாய்ப்பு
தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 24.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
jobs
யாருக்கெல்லாம் வாய்ப்பு
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 8-ஆம் வகுப்பு. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு. ஐ.டி.ஐ. டிப்ளமோ. பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.
கட்டணமும் இல்லை
இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
கூடுதல் விவரங்களுக்கு
இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.