மட்டோக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், லக்ஷ்மன் உத்தேக்கர் இயக்கத்தில் சாம்பாஜி மகாராஜாவின் வரலாற்றுப் படமான ச்சாவாவில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றனர். ராஷ்மிகாவின் லுக்கை பார்த்து ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
மட்டோக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், லக்ஷ்மன் உத்தேக்கர் இயக்கத்தில் வரும் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் ரிலீசாக தயாராகி வருகிறது பாலிவுட் படமான ச்சாவா. மராத்திய மன்னன் சாம்பாஜியின் வரலாற்றை தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் மகாராஜா சாம்பாஜியாக விக்கி கவுஷலும், மராத்திய மகாராணி யேசுபாயாக ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருக்கின்றனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் அனிமல், புஷ்பா 2 என ராஷ்மிகாவுக்கு தொட்டதெல்லாம் பொன் என்னும் அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் அவரது அடுத்த படமான ச்சாவாவில் ராஷ்மிகாவின் லுக்கை பார்த்து அப்செட் ஆகியிருக்கின்றனர் ரசிகர்கள்.
ச்சாவா படத்தின் ப்ரீ - ப்ரொடக்ஷன்ஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே தொடங்கியிருந்த நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங்கும் கடந்த ஆண்டிறுதியில் முடிவுபெற்றிருந்தது. ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருக்கும் இந்த ச்சாவா திரைப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14 - ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதைத் தொடர்ந்து இந்த படத்தின் மீதும் அதே அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
மூன்றே படத்தில் 3000 கோடி வசூல் அள்ளிய ஒரே ஹீரோயின்! யார் இந்த பாக்ஸ் ஆபிஸ் குயின்?
இந்த நிலையில் படத்தின் கதாநாயகனான விக்கி கவுஷலின் போஸ்டர் ஒன்று ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சாம்பாஜி மகாராஜ் ஆக்ரோஷமாக இருப்பது போன்றிருக்கும் அப்போஸ்டர் வெளியானதுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
தொடர்ந்து அடுத்தடுத்து அப்படத்தின் போஸ்டர் வெளியாகியிருக்கின்றது. சாம்பாஜி மகாராஜாவின் மனைவி எசுபாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் முகலாய மன்னர் அவுரங்கசிப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அக்ஷயீ கன்னா ஆகியோரது போஸ்டர்களும் தற்போது வெளியாகி இருக்கிற்து. இதில் நடிகை ராஷ்மிகாவின் லுக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி கிளம்பியிருக்கிறது. ஒரு போஸ்டரில் ராஷ்மிகா ஹெவியான நகை அலங்காரத்துடன் சிரித்துக் கொண்டிருப்பது போன்று இருக்கிறது. மற்றொரு போஸ்டரில், ராஷ்மிகா கட்ஞ்சிவப்பு நிற புடவையில், நகைகள் அணிந்து மகாராணி போல காட்சி அளிக்கிறார். ஆனால் அவரது கண்களில் கோவம் தெரிவது போன்றும் அப்போஸ்டர் இருக்கிறது.
எனக்கு பீலீங்ஸ் பாடல் ஷூட் கஷ்டமாகவே இருந்தது: ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்!
அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மட்டோக் ஃபிலிம்ஸ் , ராஷ்மிகாவின் போஸ்டரை பகிர்ந்திருப்பதோடு, ஒவ்வொரு பெருமைமிக்க மன்னர்களுக்கு பின்னிருக்கும் பலம் அவர்களது மகாராணி தான். அதேபோலதான் சுவராஜியாவின் பெருமை - ராணி எசுபாய் என பதிவிட்டிருந்தது. ஆனால் மகிழ்ச்சி, எமோஷனல் தருணம் என ராயல் லுக்கில் ராஷ்மிகா காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. ராஷ்மிகாவுக்கு இந்த கதாபாத்திரம் செட் ஆகவில்லை என்பது தான் ரசிகர்களின் வாதமே!
அதாவது, உடை முதல் நகை அலங்காரம் வரைக்கும் பார்த்து பார்த்து ராஷ்மிகாவின் லுக்கை ராயலாக உருவாக்கி இருந்தாலும், அவர் எசுபாய் மகாராணி கதாபாத்திரத்துக்கு பொருந்தவில்லை என்றே வாதிடுகின்றனர் நெட்டீசன்கள். அதுமட்டுமில்லாமல், எசுபாய் கதாபாத்திரத்து யார் பொருத்தமாக இருப்பார் எனவும் இணையத்தில் விவாதத்தை தொடங்கியுள்ளனர். அந்த ரோலுக்கு சீதா ராமம் பட கதாநாயகி மிருனால் தாக்கூரை தேர்வு செய்திருக்கலாம், அவர் மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர் என்பதால் இந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பார். இல்லையெனில் கிருத்தி - விக்கி ஜோடி கூட கலக்கி இருக்கும் என பொருந்துத் தட்டி வருகின்றனர்.