திருப்பரங்குன்றம் முருகன் மலையில் அமர்ந்து அசைவ உணவு! திமுக கூட்டணி எம்.பி.க்கு எதிராக கொதிக்கும் எல்.முருகன்!

First Published | Jan 23, 2025, 1:27 PM IST

திருப்பரங்குன்றம் மலையில் நவாஸ்கனி அசைவ உணவு உண்டதற்கு எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Thiruparankundram Murugan Temple

மதுரை திருப்பரங்குன்றத்தில் மலைமேல் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து திருப்பரங்குன்றம் சென்ற வக்பு வாரிய தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தர்காவுக்கு சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் மலையில் அமர்ந்து நவாஸ்கனி அசைவ உணவு சாப்பிட்ட சம்பவத்திற்கு எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

L Murugan

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழர் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் கோவில் மலையில் அமர்ந்து, தமிழகத்தின் மதநல்லிணக்க பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அசைவ உணவு உண்ட பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்களின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.


NavasKani

மதநல்லிணக்கம் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருப்பதாக கூறிவிட்டு, இந்து சமுதாய மக்களின் புனித மலையாக போற்றப்படுகின்ற திருப்பரங்குன்றம் முருகன் மலையில் அமர்ந்து கும்பலாக சென்று அசைவம் சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து மதநல்லிணக்க பண்போடு அமைதியாக இருந்து வந்த மக்களிடத்தில் பிரிவினையை தூண்டுகின்ற நோக்கில், ஒரு பிரிவினைவாதியைப் போல் செயல்பட்டிருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி.

இதையும் படிங்க: சென்னை மக்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!

Murugan temple

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் விரும்பத்தகாத சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை திசை திருப்பும் நோக்கத்தோடு, திருப்பரங்குன்றம் மலைமீது சென்று அசைவ விருந்து அளிக்க முற்பட்டவர்களால் ஏற்பட்ட பதற்றமான சூழலை, ரகசியப் பிரமாணம் மேற்கொண்டு பதவியேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மேலும் பதற்றமானதாக மாற்றுவது எப்படி ஏற்கத்தக்கதாகும்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி தலையில் இடியை இறங்கிய ஐகோர்ட்! அதிர்ச்சியில் அதிமுகவினர்!

Dravidian Model

மேலும், தமிழகத்தில் எல்லோருக்குமான மற்றும் சமூகநீதி ஆட்சி வழங்குவதாக கூறிக்கொள்ளும் போலி திராவிட மாடல் திமுக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும், இந்து சமுதாய விரோதப் போக்கை கைவிடப் போவதில்லை என்பதும் இன்று நடந்த சம்பவத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்வது சமூகத்தின் அமைதியை நிச்சயம் சீர்குலைக்கும். ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர்நவாஸ்கனி மேற்கொண்ட இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இச்செயல் புரிந்ததற்காக தமிழக மக்களிடத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் கூறிக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!