chennai metro
சென்னையில் போக்குவரத்து நெரிசல்
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் வளர்சிக்கு ஏற்ப மக்கள் தொகையும் சென்னையில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னைக்கு அருகே விழுப்புரம் என்று கூறும் அளவிற்கு கூறும் நிலை உருவாகிவிட்டது. அதற்கு ஏற்றார் போல் சென்னையின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மக்கள் செங்கல்பட்டை தாண்டி குடியேறி தினமும் சென்னைக்கு வேலைக்காக வந்து செல்கிறார்கள். இவர்களின் வசதிக்கு மின்சார ரயில் பெரிதும் உதவியாக உள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக தற்போது மெட்ரோ ரயிலின் சேவையானது வரப்பிரசாதமாக மாறிவிட்டது. அந்த வகையில் நாளுக்கு நாள் அதிகமான மக்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
Chennai Metro Rail
மெட்ரோ ரயில் திட்டங்கள்
மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய போது மக்கள் அதிகளவு பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது மின்சார ரயிலுக்கு இணையாக மெட்ரோ ரயிலில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பிட்ட இடத்திற்கு உடனடியாக செல்ல வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் தற்போது 54 கி.மீ., தூரத்திற்கு இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள் உள்ளன,
முதல் வழித்தடமான சென்னை விமான நிலையம் தொடங்கி கோயம்பேடு வழியாக முதல் சென்ட்ரல் வரையும், சென்ட்ரல் தொடங்கி கிண்டி வழியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தை கடந்து விம்கோ நகர் வரை இயக்கப்படுகிறது. இதன் மூலம் மட்டும் தினமும் 3.20 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
metro plan
மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம்
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய கடந்த 9 ஒன்பது ஆண்டுகளில் 36 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர், அந்த அளவிற்கு மெட்ரோ ரயில் சேவை மக்களின் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை, மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை, மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை பணியானது துரிதப்பட்டுத்தப்பட்டுள்ளது.
பட்டாபிராம் வரை நீட்டிப்பா.?
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கோயம்பேடு முதல் ஆவடி வரை முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. இதை பட்டாபிராம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பட்டாபிராம் பகுதியில் இருந்து சென்னைக்கு கல்விக்காகவும், பணிக்காவும் நாள்தோறும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கி ஆவடி வரையில் சுமார் 16 கி.மீட்டருக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தூரம் 16.1 கிமீ ஆகும்,
Chennai Metro
15 ரயில் நிலையங்கள்
தற்போது இந்த திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட ஆய்வு தொடங்கியுள்ளது. இதனால் நீளமானது மேலும் 4 கிலோ மீட்டர் அதிகரித்து 20 கிமீ ஆக கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கட்டுமான செலவு சுமார் ரூ. 6,500 கோடி என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு இடையே 15 ரயில் நிலையங்கள் அமைக்கவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் படி கோயம்பேட்டில் தொடங்கி வாவின், அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம், திருமுல்லைவாயல், ஆவடி வரை ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
metro train
பிப்ரவரி மாதம் அறிக்கை தாக்கல்
கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தால் புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.