Metropolitan Transport Corporation
தலைநகர் சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் 3, 365 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநகரப் பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பேருந்துகள் சென்னை நகரின் சுமார் 40 கி.மீ. வரை அதாவது செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவளம், ஆவடி, மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வரை மக்களுக்கு சேவை புரிகின்றது.
Tamilnadu Government
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்ட பகுதிகளில் நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் வகையில் 2,875 தனியார் சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தலைநகர் சென்னையிலும் தனியார் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் பயணியர் மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று தமிழகத்தில் புதிய மினி பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்தது. இது சம்பந்தமான வரைவு திட்டம், தமிழக அரசிதழில் கடந்த ஆண்டு வெளியானது.
Chennai mini Bus
இந்நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலியில் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.