மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்! உள்ளே புகுந்த போலீஸ்! அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்!

சென்னை அண்ணா நகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

massage center

தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட இடங்களில் புற்றீசல் போல் மசாஜ் சென்டர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்தைகள் கூறி அப்பாவி பெண்களை சீரழிக்கின்றனர். 

prostitution

இந்நிலையில் சென்னையில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மப்டியில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்ததில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. 

Tap to resize


Police Arrest

பின்னர் பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் அதிரடியாக நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மசாஜ் சென்டரின் உரிமையாளர் திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி பிரேமா (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

Women Rescued

அவரிடமிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மகளிர் காப்பகத்தில் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பாலியல் தொழில் நடத்திய பிரேமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 

Latest Videos

click me!