MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னை மக்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!

சென்னை மக்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!

தலைநகர் சென்னையின் புறநகர் பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Jan 23 2025, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Metropolitan Transport Corporation

Metropolitan Transport Corporation

தலைநகர் சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) சார்பில் 3, 365 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மாநகரப் பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இப்பேருந்துகள் சென்னை நகரின் சுமார் 40 கி.மீ. வரை அதாவது செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவளம், ஆவடி, மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வரை மக்களுக்கு சேவை புரிகின்றது. 

25
Government Mini Bus

Government Mini Bus

அதுமட்டுமல்லாமல் பெரிய அளவிலான பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களில் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவு கிடைத்துள்ளது. 

இதையும் படிங்க: ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

35
Tamilnadu Government

Tamilnadu Government

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்ட பகுதிகளில் நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் வகையில்  2,875 தனியார் சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தலைநகர் சென்னையிலும் தனியார் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் பயணியர் மற்றும் மினி  பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று தமிழகத்தில் புதிய மினி பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்தது. இது சம்பந்தமான வரைவு திட்டம், தமிழக அரசிதழில் கடந்த ஆண்டு வெளியானது. 

45
Private Mini buses

Private Mini buses

அதன்படி தமிழகம் முழுதும் மினி பேருந்து சேவை விதிகளில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. அதில், சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் முதல் முறையாக தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்! உள்ளே புகுந்த போலீஸ்! அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்!

55
Chennai mini Bus

Chennai mini Bus

இந்நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலியில் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிகரெட்டால் பொசுக்கப்பட்ட மீசை... யாரும் அறியாத நல்லகண்ணு-வின் மறுபக்கம்..!
Recommended image2
சென்னை ரயில் பயணிகளுக்கு.. 45 நாட்கள் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
Recommended image3
தங்கம், வெள்ளி வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved