41 நிமிட தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படம் எடுக்க 6 ஆண்டுகள் உழைத்துள்ளார் - கார்த்திகி பற்றிய சுவாரஸ்ய தகவல்

First Published | Mar 13, 2023, 12:51 PM IST

கார்த்திகி ஆஸ்கர் விருது வென்று சாதித்துள்ளது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக அவருக்கு பயிற்றுவித்த கல்லூரி பேராசிரியை ராதா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

ஊட்டி அருகே உள்ள முதுமலையில் படமாக்கப்பட்ட ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்கிற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இப்படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் உள்ள ஜி.ஆர்.டி கல்லூரியில் தான் பயின்றார். அங்கு விஸ்காம் படித்த இவர் தற்போது ஆஸ்கர் விருது வென்று சாதித்துள்ளது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக அவருக்கு பயிற்றுவித்த கல்லூரி பேராசிரியை ராதா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் கார்த்திகி கோன்சால்வ்ஸ் பற்றி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : “கார்த்திகி 2004 முதல் 2007-ம் ஆண்டுவரை கோவை ஜி.ஆர்.டி கல்லூரியில் விஸ்காம் படித்தார். அவர் ஆஸ்கர் விருது வென்றுள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவே ஜெயித்தது போல் இருக்கிறது. விஸ்காம் படித்துவிட்டு என்ன பெருசா சாதிச்சிடுவீங்க என கேட்பவர்களுக்கு இது ஒரு பதிலாக தான் இந்த விருதை நான் பார்க்கின்றேன்.

இதையும் படியுங்கள்... ஆஸ்கர் விருது வென்ற ஊட்டிப் பெண் கார்த்திகி பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் அடங்கிய எக்ஸ்குளூசிவ் பேட்டி

Tap to resize

இதுவரை பெரிய பெரிய ஜாம்பவான்கள் தான் ஆஸ்கர் விருதை வென்று பார்த்திருக்கிறோம். ஒரு விஸ்காம் மாணவியாக கோயம்புத்தூரில் படிச்ச ஒரு பொண்ணு எலிபெண்ட் விஸ்பரர்ஸுக்காக அந்த மலைவாழ் மக்களோடு 6 ஆண்டுகள் பயணித்து இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். இந்த விருது அவரது கடின உழைப்புக்காக கிடைத்த பலனாக தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். 6 வருடம் அவர் படமாக்கியதை தான் 41 நிமிடங்களில் நமக்கு காட்டி இருக்கிறார். குறிப்பிட்ட பழங்குடியின தம்பதியின் வாழ்க்கையையும், அந்த யானைகளின் வாழ்வியலையும் மிகவும் அழகாக வர்ணித்து எடுத்து மக்களுக்கு புரியும்படி எளிமையாக கொடுத்திருக்கிறார் கார்த்திகி. 

இதையும் படியுங்கள்... ஊட்டிப் பெண் இயக்கத்தில்... தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது - யார் இந்த கார்த்திகி?

ஆஸ்கர் விருதை வெல்ல மிகத் தகுதியான நபர் கார்த்திகி என்று சிலாகித்து பேசிய பேராசிரியை ராதா, தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் குறும்படம் ரிலீஸ் ஆகும் முன்பில் இருந்தே, அதாவது அதன் போஸ்டர் வெளியிட்டதில் இருந்தே தான் பாலோ பண்ணி வந்ததாகவும், அது ஆஸ்கருக்கு நாமினேட் ஆனபோது கூட இது கண்டிப்பா ஜெயிக்கும்னு சொன்னேன், அதே மாதிரி ஜெயிச்சிருச்சு என பெருமையுடன் கூறினார். ஒரு விஸ்காம் பேராசிரியையாக பணியாற்றி வரும் தனக்கு இதைவிட ஒரு சந்தோஷமான நிகழ்வு வருமா என்றால் அது கேள்விக்குறி தான் என்று உற்சாகம் பொங்க பேசினார் ராதா.

இதையும் படியுங்கள்... Oscar 2023: ஆஸ்கர் விருது வென்ற யானை படம்! ஏசியாநெட்டுக்கு பெள்ளி அளித்த சிறப்பு பேட்டி 

தொடர்ந்து பேசிய ராதா, ஒரு ஆவணப்படம் என்றால் அதனை எந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்கிறீர்கள், ஆராய்ச்சி செய்த அந்த விஷயத்தை எப்படி ஷார்ட் ஆக கொண்டுவருகிறோம் என்பது முக்கியம். கார்த்திகி போட்டோகிராபி மிகவும் அருமையாக செய்வார். அதன் வெளிப்பாடு தான் அந்த குறும்படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரியும். கொரோனா காலகட்டத்திலும் இந்த ஆவணப்படத்திற்காக கார்த்திகி கடுமையாக உழைத்தையும் நினைவுகூர்த்த பேராசிரியை ராதா, கல்லூரி நாட்களில் கார்த்திகி மற்ற மாணவிகள் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்தவராக இருப்பார் என்றும், விளையாட்டுத்தனம் இல்லாமல் தான் என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனத்துடன் செயல்படுவார் என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள்... 7 ஆஸ்கர் விருதுகளை வென்று கெத்து காட்டிய அமெரிக்க படம்... அதுல அப்படி என்ன ஸ்பெஷல்?

Latest Videos

click me!