உலகளவில் இன்று ஹாட் டாப்பிக் ஆக இருப்பது ஆஸ்கர் விருது தான். 95-வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 23 பிரிவுகளில் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்தியர்களுக்கு இது ஸ்பெஷலான ஒரு ஆண்டாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் இந்திய படைப்புகளுக்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கும், தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற ஆவண குறும்படத்திற்கும் விருதுகள் கிடைத்துள்ளன.
இதுதவிர ஆஸ்கர் விருது விழாவில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறிய திரைப்படம் தான் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once). அமெரிக்க திரைப்படமான இது கடந்தாண்டு வெளியாகி இருந்தது. இப்படம் ஆஸ்கர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மொத்தம் 11 பிரிவுகளில் நாமினேட் ஆகி இருந்தது. அதில் 7 பிரிவுகளில் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை ஆகிய 7 பிரிவுகளில் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இவ்வளவு விருதை வென்று குவித்துள்ள இப்படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பதை தற்போது பார்க்கலாம்.
இது ஒரு அட்வெஞ்சர், ஆக்ஷன், பிளாக் காமெடி, சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம். இந்த படத்தின் ஒன்லைன் என்னவென்றால், கதையின் நாயகியான மிச்செல் யோஹ், தனது கணவர் மற்றும் மகளுடன் பூமியில் ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் ஆல்பா யூனிவர்ஸ் என மற்றொரு பிரபஞ்சத்தில் இருந்து வந்து கதையின் நாயகன், பூமியில் உள்ள நாயகியிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார்.
இதையும் படியுங்கள்... Oscars 2023 : ஆஸ்கர் விருது வென்ற பிரபலங்கள் யார்... யார்? - முழு பட்டியல் இதோ
அது என்னவென்றால், ஆல்பா யூனிவர்ஸில் உள்ள ஹீரோ இறந்துவிடுவதாகவும், அங்குள்ள அவரது மகள், உலகத்தை அழிக்கக்கூடிய மிகப்பெரிய வில்லியாக மாறிவிட்டதாகவும் கூறுகிறார். இதையடுத்து நாயகி மிச்செல் என்ன செய்தார், வேறு ஒரு பிரபஞ்சத்தில் இருந்து வந்து உலகை அழிக்க நினைக்கும் தனது மகளின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தினாரா இல்லையா என்பதை அதகளமான திரைக்கதை உடன் சொல்லியுள்ள படம் தான் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்.