இறகுகள் பதித்த கிளாமர் உடையில் தேவதையாய் ஜொலிக்கும் மாளவிகா

First Published Aug 22, 2022, 7:14 PM IST

தற்போது இறகுகள் பதித்த ஜொலிக்கும் உடையில் கவர்ச்சிகரமான போட்டோ சூட் நடத்தி இளசுகளின் மனதை வசீகரித்துள்ளார் மாளவிகா மோகன்.

Malavika Mohanan

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின். முதலில் இவர் மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து இவர் நடித்த படங்கள்  பாராட்டுகளை பெற்றிருந்தது.

Malavika Mohanan

கடந்த 2017 ஆம் ஆண்டு கிரேட் பாதர் என்னும் படத்தில் தோன்றியிருந்த மாளவிகா மோகனனுக்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அதில் சூப்பர் ஸ்டாரின் நண்பனாக வரும் சசிகுமாருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...அட இன்னமும் மாஜி மாமனார் மீது பாசம் விட்டு போகலையே? சூப்பர் ஸ்டார் போஸ்டரை புகழ்ந்த தனுஷ்

Malavika Mohanan

அந்த படத்தில் மாளவிகாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றிருந்தது. பேட்ட படத்தை தொடர்ந்து மாஸ்டரில் நாயகியாகும் வாய்ப்பு மாளவிகா மோகனுக்கு கிட்டியது. அதன்படி விஜய் நாயகனாக நடித்த மாஸ்டர் படத்தில் ப்ரொபஷராக வந்திருப்பார்.

மேலும் செய்திகளுக்கு...இரண்டு தலைமுறை ஸ்டண்ட் மாஸ்டர்களை களமிறங்கிய நெல்சன்..வேறலெவலில் ரெடியாகும் ஜெயிலர்..

Malavika Mohanan

அதோடு லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தின் முக்கிய திருப்புமுனைக்கு  காரணமாக இருக்கும் பெண் முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் ஆதரவை பெற்றார் மாளவிகா மோகனன்.  வழக்கமான நாயகிகளுக்கு உரித்தான ரொமான்ஸ் மற்றும் காதல் பாடல்களில்இடம்பெறாவிட்டாலும்  மாஸ்டர் படத்தில் ஹீரோயினியாகவே இவர் கருதப்பட்டார்.

Malavika Mohanan

பின்னர் ஓடிடியில் வெளியான தனுஷின் மாறன் படத்தில் பத்திரிக்கையில் வேலை செய்பவராக தோன்றியிருந்தார் மாளவிகா. முன்னதாக மாஸ்டர் படத்தில் சேலையில் ஆசிரியருக்கே உரித்தான கெட்டப்பில் வந்திருந்த இவர், மாறன் படத்தில் அல்ட்ரா மாடனாக நடித்திருந்தார்.  இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை.

மேலும் செய்திகளுக்கு...திடீரென சென்னைக்கு விசிட் அடித்த ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன்..என்ன விஷயம் தெரியுமா?

Malavika Mohanan

தற்போது பாலிவுட் பக்கம் சென்று விட்ட மாளவிகா மோகன், யுத்ரா என்னும் படத்தில் நடித்து வருகிறார். சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பலரும் அறியும் நாயகியாக உயர்ந்து விட்டார் மாளவிகா மோகனன். இவர் வெப் தொடர்களையும்  விட்டு வைக்கவில்லை.

Malavika Mohanan

கடந்த 2020 ஆம் ஆண்டு மசபா மசபா எனும் நெட்ஃப்லிக்ஸ் தொடரில் நடித்திருந்தார். இவரின் நடிப்பிற்காக ஏசியா விஷன் விருதுகள், திரை விருதுகள் உட்பட பல பாராட்டுகள் கிடைத்துள்ளன. புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார் மாளவிகா மோகனன். தற்போது இறகுகள் பதித்த ஜொலிக்கும் உடையில் கவர்ச்சிகரமான போட்டோ சூட் நடத்தி இளசுகளின் மனதை வசீகரித்துள்ளார் மாளவிகா மோகன்.

click me!