காருக்குள் கவர்ச்சி...மாமனிதன் நாயகியின் கண்கவரும் போஸ்கள்!

First Published Aug 5, 2022, 8:29 AM IST

காருக்குள் அமர்ந்தபடி சீவ்லெஸ் கட் ஜிம்மிஸ் அணிந்து மத்திய அழகை காட்டியபடி காயத்ரி  கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

GayathrieShankar

விஜய் சேதுபதி அறிமுக நாயகனாக இருந்தபோது இவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் காயத்ரி சங்கர். அந்த படத்தில் இவரை பார்த்து "ப்பா" என்னும் விஜய் சேதுபதியின் ரியாக்சன்  இன்று வரை இளசுகள் மத்தியில் பிரபலம்.

GayathrieShankar

மீண்டும் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த ரம்மியில் இனிகோ பிரபாகரனுக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து மக்கள் செல்வனுடன் சித்திரம் பேசுதடி 2, முரண், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் காயத்ரி.

GayathrieShankar

பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தில் உஷாவாக வாய்ஸ் மட்டும் கொடுத்திருந்த இவர்  சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் போலீஸ் உளவுத்துறையை சேர்ந்த பகத் பாஸிலுக்கு ஜோடியாக தோன்றியிருந்தார். இவரை விஜய் சேதுபதி கொலை செய்யும் காட்சியில்  காயத்ரியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

GayathrieShankar

 முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சீனு ராமசாமியின் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார்.  இந்த படத்தில் காயத்ரியின்  ரோல் கட்டாயம் விருதுகளை குவிக்கும் என பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். படம் கடந்த ஜூன் 24ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

 தற்போது மலையாள படம் ஒன்றிலும் பகிரா, இடிமுழக்கம், காயல், டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ள காயத்ரி சங்கர், வெள்ள ராஜா, விரல் நுனி, ஐ ஹேட் யூ ஐ லவ் யூ, ஸ் உள்ளிட்ட வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். 

GayathrieShankar

இவர் தற்போது காருக்குள் இருந்தபடி கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதில் சீவ்லெஸ்  கட் ஜிம்மிஸ் அணிந்து மத்திய அழகை காட்டியபடி அவர் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

click me!