காதல் தோல்வியால் கப்சிப்னு ஆன கமல் மகள்... பிரேக் அப் பற்றி ஸ்ருதியின் மாஜி காதலன் சாந்தனு சொன்னதென்ன?

First Published Apr 30, 2024, 11:13 AM IST

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தனது காதலன் சாந்தனு ஹசாரிகாவை பிரேக் அப் செய்துள்ளது தான் தற்போது ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.

shantnu hazarika, Shruti Haasan

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், சினிமாவில் ஹீரோயினாக மட்டுமின்றி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக கலக்கி வருகிறார். அண்மையில் அவர் இசையமைத்து பாடி இருந்த இனிமேல் என்கிற சுயாதீன இசை ஆல்பம் பாடல் வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த மியூசிக் வீடியோவில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தார்.

Shruti Haasan Lover

இனிமேல் பாடலில் காதல், கல்யாணம், பிரேக் அப், விவாகரத்து போன்றவை அடங்கி இருக்கும். அந்த பாடலில் வருவது போல் தன்னுடைய ரியல் காதலனை பிரேக் அப் செய்து நடிகை ஸ்ருதிஹாசன் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஸ்ருதிஹாசன், மும்பையை சேர்ந்த டூடுள் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் மும்பையில் வீடெடுத்து லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூலை தட்டிதூக்க காத்திருக்கும் கில்லி... 10 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

Shruti Haasan Love Break Up

சாந்தனுவை காதலிக்கும் போது அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை ஸ்ருதிஹாசன் அடிக்கடி பதிவிட்டு வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஸ்ருதிஹாசன் அண்மையில் மீண்டும் ஆக்டிவ் ஆனார். ஆனால் ஆக்டிவ் ஆன கையோடு, தன்னுடைய காதலன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கினார் ஸ்ருதி.

Shantnu Hazarika about Love Break Up with Shruti Haasan

இதனால் சாந்தனுவும் ஸ்ருதிஹாசனும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக செய்திகள் உலா வர தொடங்கின. இந்த நிலையில், இதுபற்றி அண்மையில் சாந்தனுவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு மன்னித்துவிடுங்கள், அதுபற்றி நான் பேச விரும்பவில்லை எனகூறிவிட்டு சட்டென கிளம்பி இருக்கிறார் சாந்தனு. அவரின் இந்த செயல் அவர்களின் பிரேக் அப்பை உறுதி செய்தாலும் எதற்காக பிரிந்தார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

இதையும் படியுங்கள்... Winner Movie : அப்போ வின்னர் படம் உருவாக இது தான் காரணமா? டோலிவுட் உலகை வச்சு செஞ்ச சுந்தர் சி! Viral Video!

click me!