சிறுநீரக புற்றுநோயால் முன்னாள் முதல்வர் மறைவு.. பிரதமர் இரங்கல்.. யார் இந்த சுஷில் குமார் மோடி?

By vinoth kumarFirst Published May 14, 2024, 7:46 AM IST
Highlights

சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சுஷில் குமார் மோடி கட்சி பணிகளில் இருந்து விலகுவதாக கடந்த ஏப்ரல் மாதம் வீடியோ வெளியிட்டிருந்தார். உடல் நலத்தை காரணம் காட்டி மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவித்திருந்தார். 

பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சுஷில் குமார் மோடி கட்சி பணிகளில் இருந்து விலகுவதாக கடந்த ஏப்ரல் மாதம் வீடியோ வெளியிட்டிருந்தார். உடல் நலத்தை காரணம் காட்டி மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாது என தெரிவித்திருந்தார். இதனையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி சுஷில் குமார் மோடி உயிரிழந்தார்.  அவரது இறுதிச் சடங்குகள் இன்று பாட்னாவின் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

இந்நிலையில் சுஷில் குமார் மோடி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்: பீகாரில் பாஜகவின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார். அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் அன்புக்குரிய எம்.எல்.ஏ என்று அறியப்பட்டார். அரசியல் தொடர்பான பிரச்சனைகளில், அவருக்கு ஆழ்ந்த புரிதல் இருந்தது. ஒரு நிர்வாகியாகப் பாராட்டத்தக்க பல பணிகளைச் செய்தார். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார். 

கடந்த 1952ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி சுஷில் குமார் மோடி பிறந்தார். மேலும் பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பீகார் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார்.  இதுதவிர எம்எல்சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!