பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மகனுக்கு நடந்த திருமணம்..! ஒன்று கூடிய பிரபலங்கள்.. வைரலாகும் போட்டோஸ்!

First Published | Jul 4, 2023, 6:57 PM IST

பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜலட்சுமி யின் மகன் ரோஹித்தின்  திருமணம் நடந்து முடித்துள்ளது. இதில் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற தென்னிதியை மொழிகளில் ஹீரோயினாக சில படங்களில் நடித்து, பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் ராஜலக்ஷ்மி.

இவர் ஹீரோயினாக நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார்.

செம்ம ஸ்ட்ரெக்ச்சர்... சேலையில் கூட ஸ்டைலிஷ் பேபியாக மாறி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

Tap to resize

1980 ஆம் ஆண்டு, தமிழில் வெளியான 'சுஜாதா' என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பின்னர் கோடீஸ்வரன் மகள், மூன்று முகம், அதிசய பிறவிகள், அர்ச்சனை பூக்கள், கௌரிடா சௌக்கியமா, போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

அதே யாரடி நீ மோகினி, பிரிவோம் சந்திப்போம், சைவம், காலக்கூத்து, இருவர் உள்ளம், போன்ற திரைப்படங்களில் தற்போதைய இளம் நடிகர்களுக்கு, அம்மா, பெரியம்மா, போன்ற ரோல்களில் நடித்துள்ளார்.

'மாமன்னன்' படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா? வெளியான தகவல்!

தமிழைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராஜலக்ஷ்மி.

வெள்ளித்திரையை தாண்டி சின்ன திரையில், 1991 ஆம் ஆண்டு வெளியான பெண் என்கிற தொடர் மூலம் நடிக்க துவங்கிய இவர் பின்னர் மேகலா, பிரிவோம் சந்திப்போம், செல்லமே, பிள்ளை நிலா, அழகு, அன்பே வா, போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மகன்களுடன் மொட்டை போட்டு... மனம் உருகி பிரார்த்தனை செய்த தனுஷ்!

இந்நிலையில் இவருடைய மகன் ரோகித்துக்கும், கீர்த்தனா என்பவருக்கும் ஜூன் 29ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில் தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ராஜலட்சுமியின் சீரியல் வட்டாரத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு ரோஹித் - கீர்த்தனா தம்பதியை வாழ்த்தி உள்ளனர்.

'சீதா ராமன்' சீரியலில் இனி பிரியங்கா நல்காரிக்கு பதில்.. வெள்ளித்திரை ஹீரோயின்? யார்... வெளியான சூப்பர் அப்டேட

மேலேயும் ராஜலட்சுமி மகன் திருமணம் குறித்த புகைப்படங்களை கம்பன் மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, பலர் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos

click me!