தமிழ் சினிமாவில் நயன்தாரா, சமந்தா, போன்ற முன்னணி நடிகைகளுக்கு நிகராக சைலண்டாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராய். நயன்தாராவே சமீப காலமாக கதையின் நாயகியாக நடித்த படங்கள், அடுத்தடுத்து தோல்வியை தழுவுவதால், ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளை தேர்வு செய்து நடிக்க தயங்கும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தைரியமாக தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து, தற்போது இவரின் கை வசம் நான்கு தமிழ் படமும், மூன்று மலையாள படங்களும் உள்ளது. தெலுங்கில் சில படங்களில் மட்டுமே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தாலும், இன்னும் சொல்லிகொள்ளுபடியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
உடல் எடையை குறைத்து, ஐஸ்வர்யா ராஜேஷ் சும்மா சிக்குன்னு இருக்கும் அழகில் ஜொலிக்கிறார் என ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் போட்டு வர்ணித்து வருகிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 3 வெற்றிப்படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .