மீண்டும் ரெட் ஜெயண்ட்டுக்கு நோ சொன்ன விஜய்... இந்த முறை லியோ பட உரிமையை தட்டிதூக்கியது இந்த நிறுவனமா?

First Published | Jul 4, 2023, 4:11 PM IST

விஜய் நடிக்கும் லியோ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துற்கு கொடுக்கப்படவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

leo

நடிகர் விஜய் நடிப்பில் படு வேகமாக தயாராகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் தமிழ், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். லியோ படம் பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விஜய் நடித்துள்ள காட்சிகளை படமாக்கி முடித்துள்ள லோகேஷ், அடுத்ததாக பேட்ச் ஒர்க் மட்டும் செய்ய உள்ளாராம். அத்துடம் லியோ ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துவிடும்.

லியோ படத்தின் ஷூட்டிங் முடியும் முன்பே அப்படத்தின் பிசினஸ் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ஓடிடி, ஆடியோ மற்றும் சாட்டிலைட் உரிமைகள் பெரும் தொகைக்கு விற்பனை ஆகிவிட்டன. இதையடுத்து லியோ படத்தின் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில உரிமைகளும் பெரும்பாலும் விற்பக்கப்பட்டுவிட்டது. இன்னும் எஞ்சியுள்ளது அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமை மட்டும் தான். அதற்கான பேச்சுவார்த்தை தான் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை... சினிமாவுக்காக ஒரிஜினல் ‘மொட்டை பாஸ்’ ஆக மாறி மாஸ் காட்டிய டாப் ஹீரோஸ்


தமிழ்நாட்டை பொறுத்தவரை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி ரிலீஸ் செய்து வருகிறது. ஆனால் விஜய் மட்டும் அந்நிறுவனத்திடம் தன் படங்களை கொடுக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதன்படி வாரிசு படத்தை தனது லியோ பட தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் லலித்துக்கு கொடுத்துவிட்டார் விஜய். பின்னர் லலித்திடம் பேசி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை ஆகிய நான்கு ஏரியாக்களில் மட்டும் ரெட் ஜெயண்ட் இப்படத்தை வாங்கி வெளியிட்டது. தற்போது லியோ படத்தையும் ரெட் ஜெயண்டுக்கு தராமல் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை ரூ.100 கோடி என லலித் சொல்லியுள்ளாராம். ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் 80 கோடிக்கு தருமாறு கேட்டு வருகிறதாம். இதுகுறித்த பேச்சுவார்த்தை தான் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மாமன்னன் படத்தில் நெகடிவாக இருந்தது என்ன?.. உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த அல்டிமேட் காமடி வீடியோ!

Latest Videos

click me!