சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை... சினிமாவுக்காக ஒரிஜினல் ‘மொட்டை பாஸ்’ ஆக மாறி மாஸ் காட்டிய டாப் ஹீரோஸ்

First Published | Jul 4, 2023, 3:34 PM IST

சினிமாவுக்காக பல்வேறு தியாகங்களை செய்யும் நடிகர்கள், மொட்டையடித்தும் நடித்திருக்கிறார்கள், அப்படி சினிமாவுக்காக மொட்டையடித்த நடிகர்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்த்தை பெற்ற பிறகும் ஷங்கர் இயக்கிய சிவாஜி தி பாஸ் படத்திற்காக மொட்டைத் தலையுடன் நடித்திருந்தார். அப்படத்தின் திருப்புமுனையாக கிளைமாக்ஸில் எம்.ஜி.ஆர் என கூறிக்கொண்டு மொட்டைத் தலையுடன் வரும் காட்சிகளில் அதகளம் செய்திருப்பார். அந்த காட்சிக்காக நிஜமாகவே மொட்டையடித்து நடித்திருந்தார் ரஜினி.

கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் எந்தவித கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்காக தன்னுடைய முழு உழைப்பையும் போடுபவர் தான் கமல்ஹாசன். அவர் ஆளவந்தான் படத்திற்காக முடியை எடுத்து மொட்டைத் தலையுடன் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது கெட் அப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


விக்ரம்

சினிமாவுக்கு எந்தவிதமான ரிஸ்க்கையும் எடுக்கத்துணிந்த நடிகர் என்றால் அது விக்ரம் தான். அதற்கு அவரின் ஐ படமே சாட்சி. அப்படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்தது யாராலும் மறக்க முடியாது. இவரும் பாலா இயக்கிய சேது படத்திற்காக மொட்டை அடித்து மனநலம் குன்றியவராக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... ஆத்தாடி... மஞ்சள் வீரன் படத்தில் நடிக்க டிடிஎப் வாசனுக்கு இத்தனை கோடி சம்பளமா? காஸ்ட்லி ஹீரோவா இருக்காரேப்பா!

சூர்யா

நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது கஜினி தான். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படத்தில் சூர்யா மொட்டைத் தலையுடன் நடித்து கஜினியாக அசத்தி இருந்தார். தற்போது மீம் டெம்பிளேட் ஆகவும் அது மாறி உள்ளது.

தனுஷ்

நடிகர் தனுஷ், தற்போது மொட்டையடித்துள்ளார். கேப்டன் மில்லர் படத்துக்காக ஓராண்டாக நீண்ட தாடி மற்றும் அடர்ந்த தலைமுடியுடன் காட்சியளித்து வந்தார் தனுஷ். இடையே அவரை பார்க்க பாபா ராம்தேவ் போல் இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். இந்தநிலையில், திருப்பதிக்கு சென்று மொட்டையடித்த தனுஷ், தன்னுடைய டி50 படத்தில் மொட்டைத்தலையுடன் தான் நடிக்க உள்ளாராம்.

விஜய், அஜித்

நடிகர் அஜித்தும், விஜய்யும் முழுவதுமாக மொட்டை அடித்தபடி நடித்ததில்லை என்றாலும், சில படங்களில் மொட்டை தலையில் லேசாக முடி முளைத்தது போன்ற தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். விஜய் பிரெண்ட்ஸ், தெறி போன்ற படங்களில் அவ்வாறு நடித்திருந்தார். அதேபோல் அஜித் ரெட், வேதாளம் போன்ற படங்களில் அவ்வாறு நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... 'மாமன்னன்' படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா? வெளியான தகவல்!

Latest Videos

click me!