யூடியூப் அசுர வளர்ச்சி கண்டுள்ளதால், அதன் மூலம் சம்பாதிப்பவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். யூடியூப் மூலம் பேமஸ் ஆன சிலர் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக யூடியூப்பில் ஸ்பூப் வீடியோ போட்டு பேமஸ் ஆன கோபி, சுதாகர் தற்போது படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். அதேபோல் யூடியூபர் எருமசாணி விஜய் முதலில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் கடந்தாண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த டி பிளாக் படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.
24
TTF Vasan
இதுதவிர புகழ்பெற்ற யூடியூபரான டியூடு விக்கி என்பவர் விரைவில் இயக்குனராக களமிறங்க உள்ளார். இவர் இயக்க உள்ள முதல் படத்தில் நடிகை நயன்தாரா தான் கதையின் நாயகியாக நடிக்க உள்ளாராம். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படி யூடியூப் மூலம் பேமஸ் ஆகி சினிமாவில் காலடி எடுத்து வைத்த பிரபலங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்துள்ளவர் தான் டிடிஎப் வாசன். இவர் மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தை செல்அம் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது. அதேபோல் புல்லட்டில் வீலிங் செய்தபடி வெளியான மஞ்சள் வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் படு வைரல் ஆனது.
44
TTF Vasan
இந்நிலையில், மஞ்சள் வீரன் படத்துக்காக டிடிஎப் வாசன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தில் நடிக்க அவருக்கு ரூ.1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. யூடியூப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த டிடிஎப் வாசன் தற்போது சினிமாவில் முதல் படத்திலேயே கோடிகளில் சம்பளம் வாங்கும் தகவல் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக மாறி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.