TTF Vasan
சர்ச்சைக்குரிய யூடியூபராக வலம் வருபவர் டிடிஎப் வாசன். இவர் யூடியூப்பில் அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ வெளியிட்டு பேமஸ் ஆனவர் ஆவார். இவருக்கு 2கே கிட்ஸ் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளதால் அவர்களை மகிழ்விக்கும் விதமாக இதுபோன்று அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ வெளியிட்ட டிடிஎப் வாசன், போலீசிடமும் சிக்கி அதற்காக கோர்ட், கேஸ் என அலைந்துள்ளார்.
TTF Vasan
யூடியூப்பில் கிடைத்த புகழ் வெளிச்சத்தை வைத்து தற்போது சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார் டிடிஎப் வாசன். அந்த வகையில் தமிழில் இவர் நடிப்பில் உருவாகும் முதல் படத்திற்கு மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் பூஜை கடந்த ஜூன் 29-ந் தேதி அவரின் பிறந்தநாள் அன்று சென்னையில் நடைபெற்றது. மஞ்சள் வீரன் படத்தில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... நாடி நரம்பில் புகுந்து மயக்குது தலைவா.. இசைப்புயலை புகழ்ந்து தள்ளிய செல்வராகவன் - முழு விவரம் உள்ளே!
TTF Vasan
மஞ்சள் வீரன் பட விழாவை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது பேசிய டிடிஎப் வாசன், தான் பைக் ரைடு சென்றுவிடுவதால், ஒரு சில நேரம் காஷ்மீர்ல இருப்பேன், ஒரு சில நேரம் நாக்பூர்ல இருப்பேன் என்று சொல்லும்போது இடையில் குறுக்கிட்ட கூல் சுரேஷ், ஒரு சில நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல இருப்பாரு என தக் லைப் பதில் அளித்திருந்தார். அந்த வீடியோ காட்சி இன்ஸ்டாவில் படு வைரல் ஆனது.
TTF Vasan
தற்போது அவர் சொன்னபடியே டிடிஎப் வாசனை மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் இன்று காலை டிடிஎப் வாசன் வந்த கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்தவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காரை அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார் டிடிஎப் வாசன். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் போக்குவரத்து காவலர்கள் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக வந்ததே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அச்சச்சோ ஷாருக்கானுக்கு என்னாச்சு... அமெரிக்காவில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ஜவான் நாயகன்