ஆம்பளைங்க இடுப்புல கை வச்சா அனுபவிக்கனும்... பெண்களுக்கு ரேகா நாயர் அட்வைஸ்

First Published | Jul 4, 2023, 12:00 PM IST

ஆண்கள் இடுப்பில் கைவைத்தால் அதை அனுபவிக்கனும் என நடிகர் ரேகா நாயர் சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

rekha nair

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் தான் நடிகை ரேகா நாயர். இவர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஆண்கள் இடுப்பில் கைவைத்தால் அனுபவிக்கனும் என்றும் பெண்கள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் கூறி பேசி உள்ளது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.

rekha nair

அதில் ரேகா நாயர் பேசியதாவது : “நிறைய பெண்கள் நான் இப்படி தான் டிரஸ் பண்ணுவேன் உனக்கென்ன என கேட்பார்கள். அப்படி டிரஸ் போடும்போது ஆண்கள் இடுப்பில் கை வைத்தால் நீ அதை அனுபவிச்சிக்கோ, நானே சேலை கட்டி செல்லும் போது என் இடுப்பு தெரிய தான் செய்யும். பஸ்ல நான் போகும் போது என் இடுப்புல அவன் கைவச்சா நான் தயாரா இருக்கேன். ஆனா இப்போ இருக்க பெண்களுக்கு, பரவாயில்ல வச்சிட்டு போட்டும் அப்படிங்குற மனநிலை இல்லை.

Tap to resize

rekha nair

நான் அரை டவுசர் போட்டு தான் ஜாக்கிங் செல்வேன். அதேபோல் போட்டிகளில் பங்கேற்கும் போதும் நான் என்னுடைய வசத்திக்காக அரை டவுசர் போட்டு தான் ஓடுவேன். அந்த இடத்தில் வந்து என்மேல் யாரும் கைவைக்க மாட்டார்கள் என்கிற தெளிவு வந்ததால் தான் நான் அந்த இடத்தில் அதுமாதிரி ஆடை அணிந்து ஓடுகிறேன். அதே டவுசர் போட்டுட்டு திநகருக்குள் போவது யாரோட தப்பு.

இதையும் படியுங்கள்... இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு... லியோ படத்தில் இணைந்த மேலும் ஒரு இயக்குனர் - இவரும் வில்லனா?

rekha nair

அப்படி போட்டுட்டு மாலுக்கு போனால் ஆண்கள் பார்க்க தான் செய்வான். அவனை அப்படி பார்க்க தூண்டுவது யார்? நான் என்னுடைய பிளவுஸை லைட்டா இறக்கி போட்டா அது எனக்கு ஒரு ஸ்டைலா தெரியுது, ஒரு அழகா தெரியுது, ஒரு கலையா தெரியுது. இதையெல்லாம் அவன் ரசிக்கிறான், வர்ணிக்கிறான். அவனுக்கு நீ நன்றி சொல்லிட்டு போ, அதவிட்டுட்டு ஆண்கள் ரசிக்காம வேற யாரு ரசிப்பா.

rekha nair

இன்றைய காலகட்டத்தில் சுதந்திரம் என்கிற பெயரில் பசங்களெல்லாம் அடங்கிவிட்டார்கள். பொண்ணுங்க கார், பைக்னு சுத்துறாங்க. வண்டியே ஓட்ட தெரியாவிட்டாலும் ஸ்டைலா திமிரா எல்லாம் பண்ணுவாங்க. நிறைய நியூஸ்ல ஆண்கள் தண்ணி அடிச்சு போலீஸ்ட மாட்டுனா பணத்தை கட்டிட்டு போவாங்க, ஆனா பொண்ணுங்க தண்ணி அடிச்சு மாட்டுனா நான் யார் தெரியுமானு கேட்டு போலீஸ்டயே கலாட்டா பண்ணுவாங்க. ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ மாற்ற முடியாது. சிவனாலேயே பார்வதியை மாற்ற முடியல, அதேபோல் பார்வதியாலும் சிவனை மாற்ற முடியல அதனால் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை இருந்தால் போதும்” என பேசி உள்ளார் ரேகா நாயர். அவரின் இந்த பேச்சுக்கு ஆண்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், பெண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் புது கார் வாங்கிய நடிகர் முத்துக்குமார்... அதன் விலை இத்தனை லட்சமா?

Latest Videos

click me!