Muthukumar
சினிமாவை விட சின்னத்திரை பிரபலங்களுக்கு மவுசு கூடிவிட்டது. சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்களின் அசுர வளர்ச்சியை பார்த்து பலரும் வியந்து போய் உள்ளனர். குக் வித் கோமாளி புகழ் முதல் மணிமேகலை வரை மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி, பி.எம்.டபிள்யூ கார் வாங்கும் அளவுக்கு அவர்கள் உயர்ந்துள்ளதற்கு அவர்களின் கடின உழைப்பே காரணம்.
Muthukumar
அப்படி சினிமாவைக் காட்டிலும் சின்னத்திரை மூலம் புகழ் வெளிச்சத்தை பெற்றவர் தான் நடிகர் முத்துக்குமார். இவர் சினிமாவில் சார்பட்டா பரம்பரை, விக்ரமின் மகான் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். இருப்பினும் அதற்கு பெரியளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
Muthukumar
ஆனால் இறுதிப் போட்டியில் வெற்றிவாய்ப்பை நழுவ விட்டாலும், அந்நிகழ்ச்சி மூலம் தனக்கு பெயரும், புகழும் கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் முத்துக்குமாருக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.